உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக 2டிஜி மருந்து செயல் திறன் கொண்டதாக உள்ளது- ஆய்வில் தகவல்


உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக 2டிஜி மருந்து செயல் திறன் கொண்டதாக உள்ளது- ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 17 Jun 2021 12:45 AM GMT (Updated: 17 Jun 2021 12:45 AM GMT)

பொட்டலங்களில் கிடைக்கும் இந்த மருந்து, தொற்றிலிருந்து விரைவில் குணமடையவும் ஆக்சிஜன் தேவையைக் குறைக்கவும் உதவிகரமாக இருந்து வருகிறது.


டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) ஆகியவற்றின் கலவையில், டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2டிஜி கொரோனா மருந்தை தயாரித்துள்ளது.

கடந்த 1-ம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்தது. இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது.

பொட்டலங்களில் கிடைக்கும் இந்த மருந்து, தொற்றிலிருந்து விரைவில் குணமடையவும் ஆக்சிஜன் தேவையைக் குறைக்கவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக இந்த மருந்து செயல் திறன் மிக்கதாக உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 2டிஜி அனைத்து வகையான உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் இந்த மருந்து திறம்பட செயல்படுவதாக முதல்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.  எனினும்  இது மறு ஆய்வு  செய்யப்படவில்லை. 

Next Story