சிறப்புக் கட்டுரைகள்

சாதனையாளர்: குட்டி ‘செப்’ + "||" + Achiever: Little ‘Sep’

சாதனையாளர்: குட்டி ‘செப்’

சாதனையாளர்: குட்டி ‘செப்’
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிஹல் ராஜ், யூ-டியூப் வீடியோவில் சமையலில் அசத்துகிறார். அம்மாவிற்கு பையன் உதவுவதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா...? நிஹல் ராஜ்க்கு வயது ஒன்பது.
ஆரம்பத்தில் அம்மா சமைக்கும்போது உடன் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நிஹல் ராஜிற்கு, கொஞ்ச நாளிலேயே சமையல் மீது ஆர்வம் ஏற்பட்டது. தானும் அதேபோல சமைத்து பார்க்க ஆரம்பித்தான். அதை ஒருநாள் தற்செயலாக பார்த்த நிஹலின் தந்தை ராஜகோபால், தன்னுடைய மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்தார்.

ஆரம்பத்தில் நெட்டிசன்களிடமிருந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் சளைக்காமல் நிஹலின் தந்தை, அடுத்தடுத்து சிறுவனின் வீடியோக்களை அப்லோட் செய்யவே, அவை 2018-ம் ஆண்டு முதல் வைரலாகத் தொடங்கின.

தான் சமைத்த உணவை தானே ருசித்து சாப்பிட்டபடி அவன் சொல்லும், ‘வாவ்', ‘ஆவ்ஸம்', ‘லவ் யூ' போன்ற வார்த்தைகளையும், அவன் பாடும் பாடல்களையும் பார்க்க பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது சமூக வலைத்தளங்களில். சிறுவனின் இந்த அசத்தல் வீடியோ அவ்வளவு அழகாக இருக்கிறது.

மிக்கி மவுஸ் ஐஸ்கிரீம், ஆரஞ்ச் மில்க்‌ஷேக், அரிசி புட்டு என விதவிதமாக அவன் சமைத்துக்காட்டும் உணவு வகைகளை, ஒரு தனியார் வலைத்தள நிறுவனம், அவர்களது பிரத்யேக முகநூல் பக்கத்தில் பகிர அனுமதி அளித்திருப்பதுடன், அவனை இளம் தொழில்முனைவோராகவும் மாற்றியிருக்கிறது.