சாம்சங் பிரேம் டி.வி. அறிமுகம்


சாம்சங் பிரேம் டி.வி. அறிமுகம்
x
தினத்தந்தி 21 Jun 2021 5:14 PM GMT (Updated: 21 Jun 2021 5:14 PM GMT)

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் சுவற்றில் புகைப்படங்களை மாட்டுவதைப் போன்ற பிரேம் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

இது 4-கே ரெசல்யூஷனைக் கொண்டதாக கியூலெட் டி.வி.யாக வந்துள்ளது. இது வீட்டிற்கு அழகையும் தரும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் இணைப்பு அம்சங்கள் அனைத்திற்கும் சாம்சங் ஒன் கனெக்ட் பாக்ஸ் பிரத்யேகமாக உள்ளதால் சுவற்றில் மாட்டப்படும் பிரேம் போலவே இந்த டி.வி. இருக்கும். அறையின் வெளிச்சத்திற் கேற்ப ஒளி அமைப்பை தானாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது.

இதில் சாம்சங்கின் கியூலெட் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது 43 அங்குலம், 50 அங்குலம், 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவுகளில் கிடைக்கும். ஆரம்ப விலை சுமார் ரூ.61,990.

Next Story