நீண்ட தூர பயணத்துக்கேற்ற ஹோண்டா கோல்ட் விங்


நீண்ட தூர பயணத்துக்கேற்ற ஹோண்டா கோல்ட் விங்
x
தினத்தந்தி 23 Jun 2021 12:58 AM GMT (Updated: 23 Jun 2021 12:58 AM GMT)

ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் நீண்ட தூர பயணம் செய்வோர் விரும்பும் கோல்ட் விங் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு மாடல்கள் வந்துள்ளன. இதன் விலை சுமார் ரூ.37.20 லட்சம். மேனுவல் கியர் மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டதாக இவை வந்துள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் இது விற்பனைக்கு வந்துள்ளது. 1.8 லிட்டர், 6 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது.

இது 125 பி.ஹெச்.பி. திறனை 5,500 ஆர்.பி.எம். சுழற்சி யிலும், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். பின்புறம் நகரும் (ரிவர்ஸ்) வசதி கொண்டது. 45 வாட் ஸ்பீக்கர் உள்ளது. இதனால் பயணத்தின்போது விருப்பமான பாடலைக் கேட்டு மகிழ்ந்தபடி பயணிக்கலாம். ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதி கொண்டது. இத்தகைய செயலி வசதிகள் கார்களில் மட்டுமே இருக்கும்.

ஆனால் ஹோண்டா கோல்ட் விங் மோட்டார் சைக்கிளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story