சிறப்புக் கட்டுரைகள்

பன்னாட்டு கூட்டுறவு தினம் + "||" + International Cooperation Day

பன்னாட்டு கூட்டுறவு தினம்

பன்னாட்டு கூட்டுறவு தினம்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோசலிசவாதியான சார்லஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஓவன், டாக்டர் வில்லியம் கிங் ஆகியோரின் சிந்தனையில் உதித்த தத்துவமே, ‘கூட்டுறவு’. இது 1844-ல் ரொக்டேல் நகர தொழிலாளர் களால் செயல்வடிவம் பெற்றது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோசலிசவாதியான சார்லஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஓவன், டாக்டர் வில்லியம் கிங் ஆகியோரின் சிந்தனையில் உதித்த தத்துவமே, ‘கூட்டுறவு’. இது 1844-ல் ரொக்டேல் நகர தொழிலாளர் களால் செயல்வடிவம் பெற்றது. கூட்டுறவு என்பது, ஜனநாயக அடிப்படையில் கட்டுப் படுத்தப்படும் சுயேச்சையான தொழில் முயற்சி ஒழுங்கமைப்பாகும். தனியாட் களின் பொதுவான பொருளாதார, சமூக, கலாசார தேவைகளை பெற்றுத் தருவதே இதன் நோக்கமாகும். இணைந்து செயலாற்றுதல், அனைவருக்கும் பொதுவான தன்மை, தனிநபர் சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம், சேவை நோக்கம், உயர் ஒழுக்க நிலை, கூட்டுணர்வு, புதிய சமூக ஒழுங்கு போன்றவை, இதன் பொது இயல்புகளாக உள்ளன.


சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் அனைத்தும், ஏழு வண்ணங்களை உள்ளடக்கிய கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. 1923-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதலாவது சனிக்கிழமை ‘பன்னாட்டு கூட்டுறவு தினம்’ என்பதாக உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையானது, ஒரு நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இந்தத் துறையில் ஏற்பட்ட எழுச்சியோடு ஒப்பிடும்போது, இப்போது அதன் நிலை முக்கியத்துவத்தை இழந்ததாகவே இருக்கிறது. தற்போதைய நவீன காலத்தில் ‘உலகமயமாக்கல்’ என்ற சிந்தனை காரணமாக கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இருப்பினும் ஒரு நாட்டிற்கு கூட்டுறவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதையும் மறுப்பதற்கில்லை. இதை தற்போது உலக நாடுகள் அனைத்தும் உணர்ந்தே இருக்கின்றன. அதன் காரணமாக ஆண்டு தோறும் ‘பன்னாட்டு கூட்டுறவு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நண்பர்கள் தினம்
நட்பு என்பது சாதி, மதம், பேதங்களை கடந்து வந்த ஒன்று. இந்த நட்புக்கு ஆண், பெண் தெரியாது. ரத்தத்தையும், பணத்தையும் பார்க்க தெரியாது.
2. ஜூலை-1 புலவர் குழந்தை பிறந்த தினம்
தமிழறிஞர் புலவர் குழந்தை 1906-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பிறந்தார். திண்ணைப் பள்ளியொன்றில் கல்வி பயின்ற இவர், சிறுவயதிலேயே கவிபாடும் திறனைப் பெற்றார்.
3. தேசிய மருத்துவர் தினம்
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டதுதான், மருத்துவர் தினம். ‘உலக மருத்துவ தினம்’ என்று இருந்தாலும், ‘தேசிய மருத்துவ தினம்’என்ற ஒன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
4. 7-வது சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு
7-வது சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு.
5. உலகப் பெருங்கடல் தினம்
பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கோள்களில், பூமியில் மட்டுமே பரவியிருக்கும் ஒன்று, கடல்.