தேசிய இளைஞர் படை


தேசிய இளைஞர் படை
x
தினத்தந்தி 28 Jun 2021 11:13 AM GMT (Updated: 28 Jun 2021 11:13 AM GMT)

இன்றைய இளைஞர்களே நாளைய நாட்டின் வருங்காலத் தூண்கள். இவர்கள் அனைவரும் நாட்டைக் காக்கும் பொறுப்பைப் பெற்றவர்கள் என்பதை உணரும் வகையில், அவர்களுக்குப் பொறுப்புணர்வையும், அதற்கான பயிற்சியை அளிக்கவும் உருவாக்கப்பட்டதே இந்திய தேசிய இளைஞர் படை (என்.சி.சி.).

இன்றைய இளைஞர்களே நாளைய நாட்டின் வருங்காலத் தூண்கள். இவர்கள் அனைவரும் நாட்டைக் காக்கும் பொறுப்பைப் பெற்றவர்கள் என்பதை உணரும் வகையில், அவர்களுக்குப் பொறுப்புணர்வையும், அதற்கான பயிற்சியை அளிக்கவும் உருவாக்கப்பட்டதே இந்திய தேசிய இளைஞர் படை (என்.சி.சி.).

இந்திய நாட்டின் ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். அவரால் 1948ம் ஆண்டு தேசிய இளைஞர் படை உருவாக்கப்பட்டது. இதில் முப்படைகள் உள்ளன. அவை, காக்கிநிற உடை கொண்ட தரைப்படை, நீலநிற உடை கொண்ட விமானப்படை, வெள்ளைநிற உடை கொண்ட கடற்படை. இளைஞர் படையானது ஒழுங்கு முறையையும், பிறருக்காக தன்னல மில்லாமல் தொண்டாற்றும் மனப்பான்மையையும் உருவாக்குகிறது.

ஒரு நாட்டிற்கு உணவும், தொழில் வளர்ச்சியும் எவ்வளவு முக்கியமானதோ, அந்த அளவிற்கு பாதுகாப்பும் தேவைப்படுகிறது. இதனால், இளைஞர்களுக்கு தற்காப்பு பயிற்சி, பகைவர்களைத் தாக்கும் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகிறது. வீரர்களது உடலையும், மனதையும் திடப்படுத்துவதற்காக துப்பாக்கி சுடுதல், உடற்பயிற்சி, தியானம் போன்ற பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன.

தேசிய இளைஞர் படையில் சேர்வதற்கு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை தேர்வு செய்கின்றனர். இந்த தேசிய இளைஞர் படையில் மூன்று குழுக்கள் கொண்ட 33 இளைஞர்களுக்கு ஒருவர் தலைவராக செயல்படுவார். ஆண்டிற்கு ஒருமுறை 15 நாட்கள் வெளியில் சென்று இளைஞர்களுக்கு பாசறை அமைத்து தகுந்த பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

மாணவர்களின் மனதில் நாட்டுப்பற்றை உருவாக்குவதே தேசிய இளைஞர் படையின் முக்கிய நோக்கம். மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சியுடன் பொதுமக்களுக்காகத் தொண்டாற்றும் சேவை மனப்பான்மையையும் வளர்க்கிறது இளைஞர் படை.

பொதுக்கூட்டத்தில் மனிதர்களைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்து, மருத்துவம், விளையாட்டு, வறட்சி, ஆபத்துக் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் போன்ற செயல்கள் இளைஞர் படையில் பயிற்சிகள் மூலம் கற்றுக் கொடுக்க ப்படுகின்றன.

மாணவர்களாகிய நாம் இந்திய நாட்டில் பிறந்ததற்கு பெருமைப்பட வேண்டும். பிறந்த நாட்டை பாதுகாக்கக் கூடிய முக்கியப் பொறுப்பு நம்மிடம் உள்ளது. மாணவ சக்தி என்பது மகத்தான சக்தி. அதை நாம் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் தேசிய இளைஞர் படையில் சேர்ந்து பொதுமக்கள் நலனுக்குத் தொண்டாற்ற சபதம் எடுக்க வேண்டும்.

Next Story