டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் அணியில் பதக்க வாய்ப்பு உள்ள வீரர்கள்


டோக்கியோ ஒலிம்பிக்  துப்பாக்கி சுடும் அணியில் பதக்க  வாய்ப்பு உள்ள வீரர்கள்
x
தினத்தந்தி 3 July 2021 12:28 PM GMT (Updated: 3 July 2021 12:28 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் அணியில் தமிழ் நாட்டை சேர்ந்த இளவேனில் வளரிவன் என்ற வீராங்கனையும் இடம் பெற்று உள்ளார்.

புதுடெல்லி

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இதுவரை மொத்தம் பதினைந்து துப்பாக்கி சுடும் வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர், இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட அணிகளிலேயே இது மிகப் பெரிய அணி ஆகும். இதில் தமிழ் நாட்டை சேர்ந்த  இளவேனில் வளரிவன் என்ற வீராங்கனையும் இடம் பெற்று உள்ளார். இவர்களில் பலர் பதக்க வாய்ப்பு உள்ளவர்களாக கணிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

10 மீ ஏர் பிஸ்டல் ( ஆண்கள்)


உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும்  வீரர சவுரப் சவுத்ரிக்கு 19 வயது. ​​2018 ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற  ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இளையவர் ஆவார். ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப், இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு, ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய ஏர் கன் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் இவர் ஆவார். 

தற்போது 10 மீ ஏர் பிஸ்டலில் டோக்கியோ ஒலிம்பிக்  2020 தரவரிசையில்,  2021 உலக தரவரிசையிலும், நம்பர் 2 இடத்தில் உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பதக்கத்தை சவுரப் சவுத்ரி கொண்டுவருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

மற்றொரு வீரர் அபிஷேக் வர்மாவுக்கு 31 வயது என்ஜினியர் மற்றும் வழக்கறிஞராக இருந்தவர்  துப்பாக்கி சுடும் வீரராக மாறி உள்ளார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனது வாழ்க்கையில் மிகவும் தாமதமாக துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.  

வர்மா தற்போது டோக்கியோ 2020 தரவரிசையில் முதலிடத்திலும், 2021 உலக தரவரிசையில்  3 வது இடத்திலும் உள்ளார்.

10 மீ ஏர் பிஸ்டல் ( மகளிர்)

மனு பாக்கர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனு பாக்கர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில்  நிபுணத்துவம் பெற்றவர். 19 வயதான இவர்  தற்போது டோக்கியோ 2020 தரவரிசை மற்றும் 2021 உலக தரவரிசையில் உலக நம்பர் 2 இடத்தைப் பிடித்துள்ளார். 2018 சர்வதேச துப்பாக்கி சுடும்  கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எஃப்) உலகக் கோப்பையில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அவர் உலக அளவில் தனது திறனை மீண்டும்  நிரூபித்துள்ளார், மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சிறந்த பதக்க  நம்பிக்கையாளர்களில் ஒருவராக இருப்பார்.

10 மீ ஏர் ரைபிள் (ஆண்கள்)

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் திவ்யான்ஷ் பன்வார் 22 வயது.தற்போது டோக்கியோ 2020 தரவரிசையில் 2 வது இடத்திலும், 2021 உலக தரவரிசையில் 3 வது இடத்திலும்  பன்வார் உள்ளார்.  ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக  உள்ளார்.


10 மீ ஏர் ரைபிள் ( மகளிர்)

ரைபிள் ஷூட்டிங்கில் நிபுணத்துவம் பெற்றவர்  21 வயதான இளவேனில் வளரிவன். தமிழ்நாட்டைச் சேர்ந்த  இளவேனில் வளரிவன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.2019 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் நடந்த உலக ஜூனியர் உலகக் கோப்பையில்  இளவேனில் வளரிவன் தங்கம் வென்று உள்ளார்.

அவர் தற்போது டோக்கியோ 2020 தரவரிசையில் முதலிடத்திலும், 2021 உலக தரவரிசையில் 12 வது இடத்திலும் உள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சிறந்த பதக்க  நம்பிக்கையாளர்களில் ஒருவராக இருப்பார்.

50 மீ ரைபிள் 3 வது நிலை

ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்  (வயது 21) மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.தோமர் தற்போது டோக்கியோ 2020 தரவரிசையில் 2 வது இடத்திலும், 2021 உலக தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளார்.

கலப்பு  10 மீ ஏர் பிஸ்டல் 

மனு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி இவர்கள் ஒன்றாக விளையாடிய ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.2019 முதல் மொத்தம் ஐந்து சர்வதேச துப்பாக்கி சுடும்  கூட்டமைப்பு உலகக் கோப்பை போட்டிகளில்  விளையாடியுள்ள இவர்கள்,ஒவ்வொன்றிலும் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

கலப்பு  10 மீ ஏர் ரைபிள் 

திவ்யான்ஷ் பன்வார்-இளவேனில் வளரிவன்  சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடும்  கூட்டமைப்பு உலகக் கோப்பை போட்டியில்  இருவரும் ஜோடியாக சேர்ந்து விளையாடி  தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.பன்வார் மற்றும் வளரிவன் ஜோடி நிச்சயமாக டோக்கியோவில் பதக்க போட்டியாளராக இருப்பார்கள்,

Next Story