வேலைச்சுமையால் வேதனை...


வேலைச்சுமையால் வேதனை...
x
தினத்தந்தி 3 July 2021 10:51 PM GMT (Updated: 3 July 2021 10:51 PM GMT)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு காலகட்டம் அனைத்து தரப்பினருக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. ஏராளமானோர் வீட்டில் இருந்தே அலுவலக வேலை களை பார்க்க வேண்டிய சூழல் உருவானது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் அலுவலக வேலைகளை செய்வதில் ஆண்களை விட பெண்கள் கடும் சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலை பார்க்கும் பெண்களில் 47 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும் விஷயத்தில் மன அழுத்தம், பதற்றத்தை அனுபவித்ததாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு 
ஏதே னும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற கலக்கமும் அதிகரித்திருக்கிறது. ஆண்கள் விஷயத்தில் இந்த கவலை 38 சதவீதமாக இருந்திருக்கிறது. பெண் கள் அலுவலக வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை நாடி இருக்கிறார்கள்.

வேலை பார்க்கும் தாய்மார்களில் 31 சதவீதத்தினர் தங்கள் குழந்தை பராமரிப்புக்கு முழு நேரத்தையும் செலவிடும் மனநிலையில் இருந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் வேலை பார்க்கும் தந்தையின் பங்களிப்பு 17 சதவீதமாக இருந்திருக்கிறது. அதாவது ஆண்களில் ஆறில் ஒருவர்தான் குழந்தைகளின் பராமரிப்புக்கு முழு நேரத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். அதேநேரத்தில் ஐந்தில் ஒரு தாய்மார்தான் தங்கள் குழந்தைகளை கவனித் துக் கொள்வதற்காக நண்பர்களையோ, குடும்பத்தினரையோ நம்பி இருந்திருக்கிறார்கள். குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்தபடி அலுவலக வேலைகளை செய்வது ஆண்களை விட பெண்களுக்குத்தான் சவாலானதாக அமைந்திருக்கிறது. குழந்தைகளுக்கு மத்தியில் அலுவலக வேலைகளில் போதுமான கவனம் செலுத்த 
முடிவதில்லை, அவர்களை கட்டுக்குள் கொண்டுவந்து வேலைகளை செய்து முடிக்க வேண்டியிருக்கிறது என்பது 42 சதவீத தாய்மார்களின் கருத்தாக இருக்கிறது. வேலை செய்யும் தாய்மார்களில் 46 சதவீதம் பேர் தங்கள் வேலைகளை தாமதமாக செய்து முடித்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

“அலுவலக வேலைகளையும், வீட்டு வேலைகளையும் சமமாக கையாளும் விஷயத்தில் பெண்களுக்குத்தான் சுமை அதிகரித்திருக்கிறது. இருப்பினும் ஊரடங்கு காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு மன திருப்தியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது” என்கிறார், தனியார் நிறுவனம் 
ஒன்றின் தலைமை அதிகாரி.

Next Story