மாதுளை டீ


மாதுளை டீ
x
தினத்தந்தி 3 July 2021 11:26 PM GMT (Updated: 3 July 2021 11:26 PM GMT)

பிளாக் டீ, ஒயிட் டீ, கிரீன் டீ, ஜாஸ்மின் டீ, இஞ்சி டீ, மசாலா டீ, மூலிகை டீ என பலவகையான தேநீர் புழக்கத்தில் இருக்கிறது. எனினும் பெரும்பாலான டீ வகைகளில் கலந்திருக்கும் காபின் உடல் ஆரோக்கியத்திற்கு இடையூறு விளைவிக்கக்கூடியது என்பதால் அதற்கு மாற்றான பானங்களை பருகுவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அவர்களின் விருப்பத்தை நிவர்த்தி செய்யும் வகையில் மாதுளை டீ பிரபலமடைந்து வருகிறது.மாதுளை பழச்சாறு, விதை மற்றும் அதன் உலர்ந்த பூக்களில் இருந்து உருவாக்கப்படும் இந்த வகை டீயில் ஆன்டி ஆக்சிடென்டு மற்றும் வைட்டமின்-சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. முக்கியமாக காபின் இல்லாதவை என்பதால் தூங்க செல்வதற்கு முன்பு 
பருகுவதற்கு உகந்தவை. பழ ஜூஸ்கள், பழங்களின் எசென்சுகளில் இருந்து உருவாக்கப்படும் பதப்படுத்தப்பட்ட பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாகவும் இவை விளங்குகின்றன. மாதுளைப்பழ தோல் டீ, மாதுளைப்பழ ஒயிட் டீ, கிரீன் டீ, ஐஸ் டீ என மாதுளையில் விதவிதமாக டீ தயார் செய்து பருகலாம். இந்த டீ ரகங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான ஆரோக்கிய 
நன்மைகளை கொண்டிருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம்.

தோற்றப்பொலிவு
மாதுளை தேநீரில் ஆன்டிஆக்சிடென்டு நிறைந்துள்ளது. இது வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும் தன்மை கொண்டது. அத்துடன் உடல் செல்கள் சேதம் அடைவதையும் தடுக்கும்.

எடையை குறைத்தல்
வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தும் தன்மை மாதுளை டீக்கு இருக்கிறது. அத்துடன் உடல் எடையை குறைக்கவும் உதவும். உடலில் உள்ள செயலற்ற கொழுப்புகளை எரிக்கும் செயலை மேம்படுத்தவும் செய்யும். இதனால் தினமும் அதிக கலோரிகள் எரிக்கப்படும்.

இதய ஆரோக்கியம்
மாதுளை டீ இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன் ரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவும். பொதுவாகவே ஆன்டி ஆக்சிடென்டு அதிகம் கொண்ட பொருட்கள் பல்வேறு வகையான இதய நோய்களை தடுக்கும் தன்மை கொண்டவை. அதனால் ஆன்டிஆக்சிடென்டு நிறைந்த மாதுளை டீயை பருகுவது நல்லது.

ஆக்சிஜன் அளவு
ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவை அதிகரிக் கவும் மாதுளை டீ உதவும். ரத்தம் உறைவதையும் தடுக்கும். உடலின் அனைத்து பாகங்களுக்கும் தடையின்றி ரத்தம் செல்வதற்கும் வழிவகை செய்யும். மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டு காரணமாக உடலில் கொழுப்பும் கட்டுக்குள் இருக்கும்.

பல் ஆரோக்கியம்
மாதுளை டீயில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை ஈறுகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவும்.

Next Story