சிறப்புக் கட்டுரைகள்

புடவை அணிந்து... பளு தூக்கி அசத்தும் பெண் மருத்துவர் + "||" + Wearing sari Lifting weights is awesome Female doctor

புடவை அணிந்து... பளு தூக்கி அசத்தும் பெண் மருத்துவர்

புடவை அணிந்து... பளு தூக்கி அசத்தும் பெண் மருத்துவர்
பளு தூக்குதல் மற்றும் ‘புஷ்-அப்’ எனப்படும் தண்டால் பயிற்சி பெறும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
பெண் மருத்துவர் ஒருவர் புடவை அணிந்தபடி ‘பவர் லிப்டிங்’ எனப்படும் பளு தூக்குதல் மற்றும் ‘புஷ்-அப்’ எனப்படும் தண்டால் பயிற்சி பெறும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமாக உடற்பயிற்சி செய்பவர்கள் அணிந்திருக்கும் ஆடையை போல எந்தவித அசவு கரியமும் இல்லாமல் புடவையில் சர்வ சாதாரணமாக அவர் பயிற்சி மேற்கொள்கிறார். அவரது பெயர், ஷர்வாரி இனாம்தார். 38 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். ஆயுர்வேத மருத்துவரான இவர், பளு தூக்கும் வீராங் கனையாகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைத் திருக்க விரும்பியவர், ஜிம்முக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார். பளு தூக்கும் பயிற்சி பிடித்துபோகவே அதனை ஆர்வமாக செய்து பழகி இருக்கிறார். அதில் தேர்ச்சி பெற்றவர் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தகுதியை வளர்த்துகொண்டு விட்டார். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பவர் லிப்டிங் போட்டிகளில் பங்கேற்று தங்க பதக்கங்களையும் வென்றிருக்கிறார். கொரோனா ஊரடங்கு கால கட்டம் பளு தூக்கும் பயிற்சிக்கும், போட்டிக்கும் கடிவாளம் போட்டுவிட்டது. ஜிம்கள் திறக்கப்படாமல் இருந்ததால் வீட்டிலேயே பயிற்சி பெற்று வந்திருக் கிறார். ஊரடங்கு தளர்வுகளின்போது ஜிம் திறக்கப்பட்டதும், அங்கு செல்லும் தருணமும், நீண்ட நாட் களுக்கு பிறகு செய்யும் பயிற்சியும் மறக்க முடியாத கொண்டாட்டமாக அமைய வேண்டும் என்று விரும்பி இருக் கிறார். அந்த எண்ணமே புடவை ரூபத்தில் பயிற்சியாக வெளிப்பட்டிருக்கிறது. அதுபற்றி விவரிப்பவர், ‘‘ஒரு வருட காலம் வீட்டிலேயே கழிந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஜிம்முக்கு சென்றேன். அந்த நாள், கொண்டாட்டம் போல் அமைய வேண்டும் என்று விரும்பினேன். அதனால் பண்டிகைகளின்போதோ அல்லது குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதோ எப்படியெல்லாம் அலங்காரம் செய்து கொள்வோமோ அந்த அலங்கார முறையை பின்பற்ற முடிவு செய்தேன். அதன்படி பாரம்பரிய மராத்திய புடவையை அணிந்தேன். அதற்கு பொருத்தமாக மூக்குத்தி, நகைகள், அலங்கார பொருட்களை தேர்வு செய்து என்னை அலங்கரித்துக்கொண்டேன்’’ என்கிறார்.

ஷர்வாரி, ஆயுர்வேத கிளினிக் நடத்தி வரு கிறார். அவருக்கு டீன் ஏஜ் வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆயுர்வேதத்தை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வருகிறார். ஆரம்பத்தில் யோகா, சைக்கிள் ஓட்டுதல், தரைகளில் செய்யப்படும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். 2016-ம் ஆண்டு அவரது கணவர் வைபவ் இனாம்தார், ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்வதற்கு ஷர்வாரியை ஊக்குவித்திருக்கிறார்.

‘‘ஷர்வாரி உடற்பயிற்சிகளை பெரும்பாலும் வீட்டிலேயேதான் செய்து கொள்வார். அவர் ஜிம்முக்கு சென்று பயிற்சி பெற வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கேற்ப பகல் பொழுதில் அவருக்கு நிறைய நேரம் கிடைத்தது. அவர் எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தாலும், உடல் அளவில் வலிமை பெற உதவும் பயிற்சிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பினேன்’’ என்கிறார், வைபவ் இனாம்தார்.

ஷர்வாரி கணவரின் விருப்பப்படி அவருடன், சேர்ந்து ஜிம்முக்கு சென்று பயிற்சி பெற தொடங்கியிருக்கிறார். முதல் நாளிலேயே உடல் வலிமைக்கு வித்திடும் அடிப்படை பயிற்சிகளை மேற்கொள்ள பழகி இருக்கிறார். ‘‘தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்தாலும் என் உடல் பலவீனமாக இருப்பதை கவனித்தேன். என்னால் கனமான பொருட்களை தூக்கமுடியவில்லை. எனவேதான் கனமான உடற்பயிற்சி கருவிகளை கையாளுவதை சவாலாக எடுத்துக்கொண்டேன். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் உணவு பழக்கத்திலும் மாற்றங்களை செய்தேன். தவறாமல் பயிற்சி செய்து உடலை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினேன்’’ என்கிறார், ஷர்வாரி.

ஒரு வருடத்திற்குள் 100 கிலோ எடை கொண்ட பளு தூக்கும் கருவியை எளிதாக தூக்கி பயிற்சி பெற தொடங்கி இருக்கிறார். 2017-ம் ஆண்டில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பவர் லிப்டிங் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். 2018-ம் ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்கிறார்.

"பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் வலிமையை பேண வேண்டும் என்று கூறு கிறார்கள். ஆனால் யாரும் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பதற்கு சொல்லித்தருவதில்லை. உடல் பலத்தை வலுப்படுத்திக்கொள்வதன் மூலம் என்னால் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. உண்மையான வயதை விட 10 வயது இளமையாக இருப்பது போன்ற உணர்வை தருகிறது. என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதற்கு முன்பு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கி கூறி புரியவைக்கிறேன். நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற வளர்சிதை மாற்றம் தொடர்பான நோய் களுக்கு உணவு மற்றும் உடல் செயல்பாடு குறித்து பரிசீலிக்கும்படி ஆலோசனை கூறுகிறேன்’’ என்கிறார்.