ரூ.6 கோடி - ரூ. 25 லட்சம்: ஒலிம்பிக் பதக்கத்தின் மதிப்பு இந்தியாவில் பதக்கம் வெல்பவரின் மாநிலத்தை பொறுத்தது


Image courtesy : GETTY IMAGES
x
Image courtesy : GETTY IMAGES
தினத்தந்தி 12 July 2021 12:37 PM GMT (Updated: 12 July 2021 12:48 PM GMT)

ரூ. 6 கோடி முதல் ரூ.25 ரூ. 6 கோடி முதல் ரூ25 வரை வரை ஒலிம்பிக் பதக்கத்தின் பண மதிப்பு என்பது இந்தியாவில் பதக்கம் வென்றவர் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறார் என்பதைப் பொறுத்தது.

புதுடெல்லி

இந்த மாத இறுதியில் தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான பிரகாசமான பதக்க வாய்ப்புகளில் இரண்டு மல்யுத்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வில்லாளன் அதானு தாஸ்.

ஒலிம்பிக்கில் பஜ்ரங் தங்கபதக்கம்  வென்றால், அவர் தனது மாநிலத்தில் இருந்து ரூ.6 கோடியை ரொக்கப் பரிசாகப் பெறுவார், அதே நேரத்தில் தாஸ் வெறும் ரூ .25 லட்சத்தில் திருப்தி அடைய வேண்டும்.இந்தியாவில் ஒலிம்பிக் பதக்கத்தின் பண மதிப்பு என்பது பதக்கம் வென்றவர் எத்ந்மாநிலத்தில் இருந்து வருகிறார் என்பதைப் பொறுத்தது.

பஜ்ரங் புனியாவின்  சொந்த மாநிலமான அரியானா தங்க பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ .6 கோடி என்றும் வெண்கலம் வென்றால் ரூ .2.5 கோடி என  பண விருதுகளை அறிவித்துள்ளது.

ஆனால் வில்லாளன் அதானு  தாஸின் மேற்கு வங்காள மாநிலம் ரூ.25 லட்சம் முதல் ரூ .10 லட்சம் வரை வழங்கப்படும்.என் அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம்,  ஒடிசா மற்றும் சண்டிகர்  மாநிலமும் தங்கம் வெல்பவர்களுக்கு  ரூ.6 கோடி என அறிவித்து உள்ளது. கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலம் ரூ .5 கோடி அறிவித்து உள்ளது.

இரண்டு முறை ஆசிய விளையாட்டு போட்டியில்  தங்கப் பதக்கம் வென்றவரும் முன்னாள் தடகள வீரருமான ஜோதிர்மோய் சிக்தர் மேற்கு வங்காளம் வழங்கும் தொகை மிகக் குறைவு என கூறி உள்ளார்.

“ஒரு வீரரின் அர்ப்பணிப்பு மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் முயற்சிக்கு எதுவும் தடையில்லை என்றாலும், மாநிலத்திலிருந்து ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருக்கு வழங்க கூடிய ரூ .25 லட்சம் தொகை  என்பது மிகக் குறைவு. பரிசுத் தொகையைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களுடன் சமமாக் இருந்தால்  வீரர்களை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு  உறுதி அளிக்கும் ”என்று சிக்தார் கூறினார்.



டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி பதக்க வாய்ப்பு: முழு விவரம்


டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 3 கோடி அறிவித்துள்ளன.

அதுபோல் பஞ்சாப் ரூ.2.25 கோடி அறிவித்துள்ளது. இமாசல பிரதேசம், ஜார்கண்ட், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் ரூ.2 கோடி அறிவித்துள்ளன.

உத்தரகாண்ட் ரூ.1.5 கோடி அறிவித்துள்ளது. மணிப்பூர் ரூ.1.2 கோடி அறிவித்துள்ளது. மராட்டியம்,கேரளா,கோவா ரூ.1 கோடி அறிவித்துள்ளன. 

மேகலயா ரூ.75 லடசம் அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் ரூ.50 லட்சம் அறிவித்து உள்ளது. மேற்கு வங்காளம் மட்டும் மிக குறைவாக ரூ.25 லட்சம் அறிவித்துள்ளது.

Next Story