சிறப்புக் கட்டுரைகள்

லாஜிடெக் வயர்லெஸ் கீ போர்டு + "||" + Logitech Wireless Keyboard

லாஜிடெக் வயர்லெஸ் கீ போர்டு

லாஜிடெக் வயர்லெஸ் கீ போர்டு
லாஜிடெக் வயர்லெஸ் கீ போர்டு.
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் லாஜிடெக் நிறுவனம் மிகச் சிறிய அளவிலான வயர் இணைப்பு தேவைப்படாத கீ போர்டு மற்றும் மவுஸ் அடங்கிய தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. இதனால் சற்று தூரத்திலிருந்துகூட கம்ப்யூட்டரை செயல்படுத்த முடியும். உபயோகப் படுத்தாத சூழலில் இது அணைந்து பேட்டரி திறனை சேமித்துவைக்கும். இதில் உள்ள பேட்டரி 18 மாதம் முதல் 36 மாதம் வரை செயல்படும்.


லாஜிடெக் எம்.கே 470 என்ற பெயரில் இரண்டு (கிராபைட், வெள்ளை) வண்ணங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.4,995. மிக எளிதாக டைப் செய்யும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டதாக இதன் கீ போர்டு அமைந்துள்ளது.