சோனி வயர்லெஸ் நெக்பேண்ட் ஸ்பீக்கர்


சோனி வயர்லெஸ் நெக்பேண்ட் ஸ்பீக்கர்
x
தினத்தந்தி 15 July 2021 10:19 AM GMT (Updated: 15 July 2021 10:19 AM GMT)

சோனி நிறுவனம் வயர்லெஸ் நெக்பேண்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. எஸ்.ஆர்.எஸ்.என்.பி 10 என்ற பெயரிலான இந்த ஸ்பீக்கர் புளூடூத் இணைப்பு வசதி கொண்டது.

30 மீட்டர் தொலைவில் உள்ள ஸ்மார்ட்போனுடனும் பிற ஆடியோ சாதனத்துடனும் இதை இணைத்து செயல்படுத்தலாம். இதில் மைக்ரோ போன் உள்ளதால் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியும்.

இதன் எடை 113 கிராம்.இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் செயல்படும். விரைவாக சார்ஜ் ஆக யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டது. இயர்போன், ஹெட்போன் போன்றவற்றை அணிவது சிலருக்கு அசவுகரியமாக இருக்கலாம். அத்தகை யோருக்கு இந்த நெக்பேண்ட் ஸ்பீக்கர் மிகவும் வசதியானது. இதன் விலை சுமார் ரூ.11,200.

Next Story