சிறப்புக் கட்டுரைகள்

தொடர்ந்து ஒரே மாதிரியான பயிற்சிகளை செய்தால்... + "||" + If you do the same exercises regularly ...

தொடர்ந்து ஒரே மாதிரியான பயிற்சிகளை செய்தால்...

தொடர்ந்து ஒரே மாதிரியான பயிற்சிகளை செய்தால்...
ஒரே மாதிரியான பயிற்சிகளையே எப்போதும் செய்து கொண்டிராமல், எல்லாவகையான பயிற்சிகளும் ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
ஒரே மாதிரியான பயிற்சிகளை தொடர்ந்து செய்தால், கை முட்டி, கணுக்கால் எலும்புகளில் காயம் உண்டாகும். அப்பகுதிகளில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுவதால் வீக்கமடைந்து, சிவந்து போய் தொடும்போதே கடுமையாக வலிக்கும். எனவே, ஒரே மாதிரியான பயிற்சிகளையே எப்போதும் செய்து கொண்டிராமல், எல்லாவகையான பயிற்சிகளும் ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஸ்ட்ரென்தனி்ங், வெயிட் லிஃப்டிங் போலவே ஐசொலேஷன் பயிற்சிகளும் தசைகளுக்கு வலு சேர்ப்பதில் முக்கியமானவை.

பெண்கள் ட்ரெட் மில், வாக்கிங், ரன்னிங் போன்றவையே தங்களுக்கு போதுமென்று நினைக்கிறார்கள். இதுமட்டும் போதாது. கைகள், தொடைகள், பின்புறம், மேல்முதுகு, கீழ் முதுகு, முகம், கழுத்துப் பகுதி, வயிறு, இடுப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி அதற்கான பயிற்சிகளை செய்தால் மட்டுமே ஒரு பர்ஃபெக்டான உடலமைப்பை பெற முடியும். அதற்கு சின்னச்சின்ன தசைகளுக்கும் முக்கியத்துவம் தரும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டு, அவர்கள் செய்யும் பயிற்சிகளை செய்ய நினைக்காதீர்கள். பொதுவாக எல்லோரும் இந்தத் தவறை செய்கிறார்கள். உங்கள் உடம்பு தனித்துவமானது. அதனால் உங்களுக்கேற்ற பயிற்சிகளை ஒரு உடற்பயிற்சியாளரின் உதவியோடு செய்ய ஆரம்பித்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம். உங்கள் கவனம் முழுவதும் நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகளில் மட்டும் இருக்கட்டும். கவனச்சிதறல் கூடவே கூடாது.

கடுமையான பயிற்சிகளுக்கு நடுவே இடைவெளி கொடுப்பது முக்கியம். உங்கள் வயிற்றில் ஏதாவது இருந்தால், எஞ்சிய அமிலம் இருந்தால் கூட, உங்கள் உடல் தீவிரமான உடற்பயிற்சியின் போது அதை அகற்ற முயற்சிக்கும். இதனால் வாந்தி, மயக்கம் வரக்கூடும். வாரத்தில் இரண்டு நாட்கள் ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் மூலம் உங்கள் தசைகளுக்கு பயிற்சி சொடுக்கலாம். குறிப்பிட்ட தசைகளுக்காக செய்யும் பயிற்சி என்றால் ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளி விடலாம்.