மஹிந்திரா பொலேரோ நியோ அறிமுகம்


மஹிந்திரா பொலேரோ நியோ அறிமுகம்
x
தினத்தந்தி 21 July 2021 6:45 AM GMT (Updated: 21 July 2021 6:45 AM GMT)

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் புதிய மாடலாக பொலேரோ நியோ மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது பொலேரோ எஸ்.யு.வி. மாடலாகும். அதில் தற்போது மேம்பட்ட அம்சங்கள் சேர்த்து புதிய மாடலாக பொலேரோ நியோ மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.8.48 லட்சம். வளர்ந்துவரும் இளம் தலைமுறையினர் எஸ்.யு.வி. காரில் எதிர்பார்க்கும் அம்சங்கள் அனைத்தையும் சேர்த்துள்ளது மஹிந்திரா நிறுவனம். கம்பீரமான தோற்றம், அழகிய வடிவமைப்பு, சிறப்பான செயல்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த கலவையாக இது வந்துள்ளது.

இதன் உள்புற அலங்கார வடிவமைப்பை இத்தாலியின் பின்னின்பரினா என்ற டிசைனிங் நிறுவனம் வடிவமைத்துள்ளது. பாதுகாப்புக்கு 2 ஏர் பேக்குகள், ஒருங்கிணைந்த பிரேக்கிங் வசதி (ஏ.பி.எஸ்.), எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் (இ.பி.டி.), கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் (சி.பி.சி.) உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதில் மஹிந்திரா எம்ஹாக் என்ஜின் உள்ளது. ஏழு பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம், 1.5 லிட்டர் எம்ஹாக் டர்போ டீசல் என்ஜின் உள்ளது. இது 5 ஸ்பீடு கியர்களைக் கொண்டது. பாரத் புகைவிதி 6-க்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. 100 பி.ஹெச்.பி. திறனையும், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தும்.

Next Story