சிறப்புக் கட்டுரைகள்

லேண்ட் ரோவர் டிபெண்டர் 90 + "||" + Land Rover Defender 90

லேண்ட் ரோவர் டிபெண்டர் 90

லேண்ட் ரோவர் டிபெண்டர் 90
பிரீமியம் சொகுசு கார்களை அறிமுகம் செய்யும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தற்போது டிபெண்டர் 90 மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
இது மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 3 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்ட மாடல்களில் அறிமுகமாகி உள்ளது.

இதில் 2 லிட்டர் பெட்ரோல் மாடல் 221 கிலோவாட் திறனையும், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். 3 லிட்டர் பெட்ரோல் மாடல் 294 கிலோவாட் திறனையும் 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். 3 லிட்டர் டீசல் மாடல் 221 கிலோவாட் திறனையும், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப் படுத்துவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.76.57 லட்சத்தில் ஆரம்பமாகிறது. 6 பேர் மிகவும் சவுகரியமாக பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. லேண்ட் ரோவர் வடிவமைப்பின் பாரம்பரியம் டிபெண்டர் 90 வடிவமைப்பிலும் தொடர்வதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.