சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.டபிள்யூ. ஆர் 1250. ஜி.எஸ். மற்றும் அட்வெஞ்சர் + "||" + BMW. R 1250. GS. And instructure

பி.எம்.டபிள்யூ. ஆர் 1250. ஜி.எஸ். மற்றும் அட்வெஞ்சர்

பி.எம்.டபிள்யூ. ஆர் 1250. ஜி.எஸ். மற்றும் அட்வெஞ்சர்
ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனம் பி.எம்.டபிள்யூ. ஆர் 1250. ஜி.எஸ். மற்றும் அட்வெஞ்சர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனம் பிரீமியம் சொகுசு கார்களை மட்டுமின்றி பிரீமியம் மோட்டார் சைக்கிள் தயாரிப்பிலும் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம் ஆர் 1250. ஜி.எஸ். மற்றும் அட்வெஞ்சர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு மாடலுமே வெளிநாட்டில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையிலிருந்து முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

மோட்டார் சைக்கிள் சாகச பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஜி.எஸ். மாடல் மோட்டார் சைக்கிள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில் வெளி வரும் மோட்டார் சைக்கிளின் சிறந்த செயல்பாடு, முன்னேறிய தொழில்நுட்பம் ஆகியன இதை மேலும் பிரபலமாக்கியுள்ளது. சாலைப் பயணத்துக்கு பி.எம்.டபிள்யூ. ஆர் 1250. ஜி.எஸ். மாடலும், சாகச பயணத்துக்கு பி.எம்.டபிள்யூ. ஆர் 1250. ஜி.எஸ். அட்வெஞ்சர் மாடலும் ஏற்றதாக வந்துள்ளன. இதன் விலை சுமார் ரூ.20,45,000. அட்வெஞ்சர் மாடல் விலை சுமார் ரூ.22,40,000. எல்.இ.டி. முகப்பு விளக்கு டிசைன் இதன் தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது.

இதில் 2 சிலிண்டர் பாக்ஸர் என்ஜின் உள்ளது. இது 1,254 சி.சி. திறனை வெளிப்படுத்தும். 135 ஹெச்.பி. திறனை 7,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இதில் 5 அங்குல டி.எப்.டி. தொடு திரை உள்ளது. புளூடூத் இணைப்பு மூலம் ஸ்மார்ட்போன் அழைப்பு களை மேற்கொள்ள முடியும்.