சிறப்புக் கட்டுரைகள்

பெனலி 502 சி + "||" + Paneli 502 C

பெனலி 502 சி

பெனலி 502 சி
மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் இத்தாலியைச் சேர்ந்த பெனலி நிறுவனம் புதிதாக பெனலி 502 சி என்ற பெயரிலான மோட்டார் சைக்கிளை அறிமுகப் படுத்தியுள்ளது.
இதற்கான முன் பதிவுகளை இந்நிறுவனம் தொடங்கி யுள்ளது. இது 500 சி.சி. திறன் கொண்டது. 47.5 ஹெச்.பி. திறனையும், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் கொண்டது. 6 ஸ்பீடு கியர்கள் இதில் உள்ளன. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.5 லட்சம்.

இதில் யு.எஸ்.டி. போர்க், இரட்டை பேரல் சைலன்ஸர் ஆகியன சிறப்பம்சமாகும். இது இரட்டை சிலிண்டர் என்ஜினைக் கொண்டதாகும். இதன் முகப்பு விளக்கு வித்தியாசமான அதாவது முகமூடி போன்று 5 விளக்கு களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற இளைஞர்களைக் கவரும் விதமாக அர்பன் குரூயிஸராக இது அறிமுகமாகியுள்ளது. இது பார்ப்பதற்கு டுகாடி டியாவெல் மோட்டார் சைக்கிளைப் போல இருந்தாலும், ஹாண்டில்பார் வித்தியாசமாக உள்ளது. சர்வதேச அளவில் ஹோண்டா ரிபெல் 500 மாடல் மோட்டார் சைக்கிளுக்குப் போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.