சிறப்புக் கட்டுரைகள்

3 கதவுகள் கொண்ட சாம்சங் ரெபரிஜிரேட்டர் + "||" + With 3 doors Samsung Refrigerator

3 கதவுகள் கொண்ட சாம்சங் ரெபரிஜிரேட்டர்

3 கதவுகள் கொண்ட சாம்சங் ரெபரிஜிரேட்டர்
சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் சாம்சங் நிறுவனம் 3 கதவுகள் கொண்ட ரெபரிஜிரேட்டரை அறிமுகம் செய்துள்ளது.
நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் சாம்சங் நிறுவனம் 3 கதவுகள் கொண்ட ரெபரிஜிரேட்டரை அறிமுகம் செய்துள்ளது. நவீன சமையலறை களுக்கு ஏற்றதாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. அதிக குளிர்மிக்க பிரீஸர் பகுதியை வழக்கமான பிரிட்ஜ் போல குறைந்த குளிர் நிலைக்கு மாற்றிக் கொள்ளும் வசதி இதில் உள்ளது.

அதேபோல குளிர்ந்த குடிநீரை வழங்கும் டிஸ்பென்சர் வசதியும் இதில் உள்ளது. இதற்கு கதவைத் திறக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதனால் ரெபரிஜிரேட்டரில் குளிர் நிலை தொடர்ந்து சீராக நிலவும். இது 579 லிட்டர் அளவு கொண்டது. தண்ணீர் டிஸ்பென்சர் தேவைப்படாதவர் களுக்கென அந்த வசதி இல்லாத மாடலும் உள்ளது.

இதில் இரட்டை கூலிங் நுட்பம் பின்பற்றப் பட்டுள்ளது. பிரிட்ஜ் மற்றும் பிரீஸர் பகுதி என தனித்தனியாக உள்ளது இதன் சிறப்பம்ச மாகும். கதவுகளில் 2 லிட்டர் பாட்டிலை வைக்கும் அளவுக்கு இடவசதி அதிகம் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.89,990.