சிறப்புக் கட்டுரைகள்

சோனி கிளாஸ் சவுண்ட் ஸ்பீக்கர் + "||" + Sony Glass Sound speaker

சோனி கிளாஸ் சவுண்ட் ஸ்பீக்கர்

சோனி கிளாஸ் சவுண்ட் ஸ்பீக்கர்
சோனி நிறுவனம் மிகவும் பிரத்யேகமான வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.
எல்.எஸ்.பி.எக்ஸ்.எஸ் 3 கிளாஸ் சவுண்ட் ஸ்பீக்கர் என்ற பெயரில் இது வந்துள்ளது. கண்ணாடி டியூப் உள்ளது. இதன் அதிர்வு அறையின் 360 டிகிரி கோணத்திலும் எதிரொலிக்கும். செங்குத்தாக ஒலி பரவும் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒலி அளவுக்கேற்ப கண்ணாடி அதிர்வு இருக்கும்.

இதன் மேல் பகுதி கண்ணாடியிலிருந்து வெளிச்சமும் வரும். இதை 32 விதங்களில் கட்டுப்படுத்த முடியும். தொடு விரல் தொழில்நுட்பம் உள்ள தால் வெளிச்ச அளவை தேவைக்கேற்ப கட்டுப்படுத்தலாம். ஸ்டீரியோ இசை கேட்டு மகிழ விரும்புவோர் இரண்டு ஸ்பீக்கர்களை வாங்கி இணைத்துக் கொள்ள முடியும். இதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் செயல்படும். இதன் விலை சுமார் ரூ.26,000.