சிறப்புக் கட்டுரைகள்

நிக்கான் இஸட் எப்.சி. மிரர்லெஸ் கேமரா + "||" + Nikon Z FC Mirrorless camera

நிக்கான் இஸட் எப்.சி. மிரர்லெஸ் கேமரா

நிக்கான் இஸட் எப்.சி. மிரர்லெஸ் கேமரா
புகைப்படக் கலைஞர்கள் பெரிதும் விரும்பும் பிராண்டான நிக்கான் நிறுவனம் புதிதாக இஸட் எப்.சி. என்ற பெயரிலான மிரர்லெஸ் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
இஸட் சீரிஸில் புதுமையான நுட்பங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது எப்.சி. மாடல் வந்துள்ளது. மிகச் சிறப்பான வடிவமைப்பைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

கண் வைத்துப் பார்ப்பதற்கு வசதியாக வட்ட வடிவிலான எலெக்ட்ரானிக் வியூ பைண்டர் இதில் உள்ளது. உறுதியாக இருக்கும் வகையில் இதன் மேல்பாகம் மெக்னீசியம் அலாய் உலோகத்தால் ஆனது. இதை இயக்குவது மிகவும் எளிது. ஆட்டோ மோட் மூலம், புகைப்படம் எடுக்க பயில்வோரும் படங்களை எடுக்க லாம்.

இதில் 20 வகையான காட்சிகளை தானாகவே சேர்த்து உரிய வண்ணக் கலவையுடன் புகைப்படங்களை இது தரும். இதில் 4-கே ரெசல்யூஷனில் வீடியோ காட்சிகளையும் பதிவு செய்ய முடியும். மேலும் ஸ்லோமோஷன் படங்களை எடுக்கவும், வீடியோ காட்சிகளை பதிவு செய்யவும் இதில் வசதி உள்ளது. வெப் கேமராவாகவும் இதை பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. நிக்கான் இஸட் 9 மிரர்லெஸ் கேமரா
ஜப்பானைச் சேர்ந்த நிக்கான் நிறுவனம் நிக்கான் இஸட் 9 மாடல் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.