சிறப்புக் கட்டுரைகள்

விவோ ஒய் 72 ஸ்மார்ட்போன் + "||" + Vivo Y. 72 smartphone

விவோ ஒய் 72 ஸ்மார்ட்போன்

விவோ ஒய் 72 ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்களில் பிரபலமான பிராண்டாகத் திகழும் விவோ தயாரிப்பில் தற்போது ஒய் 72 என்ற மாடல் அறிமுகமாகியுள்ளது.
இதில் 6.58 அங்குல முழு ஹெச்.டி. திரை உள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உள்ளது.

இதில் 256 ஜி.பி. நினைவக மாடலும் வந்துள்ளது. இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் அதிகரிக்கவும் முடியும். இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. 48 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறம் உள்ளது. செல்பி பிரியர் களுக்காக 8 மெகா பிக்ஸெல் கேமரா முன் புறம் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 18 வாட் சார்ஜருடன் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி கொண்ட இதன் விலை சுமார் ரூ.20,990.