கார்கில் போர் வெற்றி தினம்


கார்கில் போர் வெற்றி தினம்
x
தினத்தந்தி 26 July 2021 11:56 AM GMT (Updated: 26 July 2021 11:56 AM GMT)

மிகப்பெரிய மலைத் தொடரில் இந்த போர் நடந்தது. சவால்கள் நிறைந்த இந்தப் போரில், பாகிஸ்தானுக்கு இந்தியா பலத்த அடி கொடுத்தது.

இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனியாக பிரிக்கப்பட்ட காலம்தொட்டே, இரு நாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. அவ்வப்போது இரு நாடுகளுக்கும் சண்டைகளும் நடைபெற்று வந்திருக்கின்றன. அவற்றில் 1999-ம் ஆண்டு நடந்த போர்தான், மிகவும் தீவிரமான போராக இருந்தது. அந்தப் போரின் பெயர் ‘கார்கில்.’ பாகிஸ்தான் ராணுவத்தினர் 1999-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் ஊடுருவி அதனை ஆக்கிரமித்தனர். இதனால்இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மூண்டது.

மிகப்பெரிய மலைத் தொடரில் இந்த போர் நடந்தது. சவால்கள் நிறைந்த இந்தப் போரில், பாகிஸ்தானுக்கு இந்தியா பலத்த அடி கொடுத்தது. பாகிஸ்தானின் செயலுக்கு அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான் என உலகின் முக்கியமான நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இந்தியாவும் கூட பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எதற்கும் பாகிஸ்தான் செவிசாய்க்கவில்லை. இதனால் போர் தீவிரம் அடைந்தது. விமானப்படை உதவியுடன், டைகர் மலைப் பகுதியை முதலில் இந்தியா கைப்பற்றியது. அடுத்து வரிசையாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்திருந்த ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநர் லே என அனைத்துப் பகுதிகளையும் இந்தியா கைப்பற்றியது. இறுதியாக ஜூலை 26-ந் தேதி, கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றி, அங்கு நம் நாட்டுக் கொடியை இந்திய ராணுவ வீர்கள் நாட்டினர்.

இந்திய தரப்பில் 543 ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரைக் கொடுத்து, இந்த வெற்றியை இந்தியாவிற்கு பரிசளித்தனர். பாகிஸ்தான் தரப்பிலும் ஏராளமானவர்கள் பலியாகியிருந்தனர். கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதியை ‘கார்கில் வெற்றி தினம்’ என்று கொண்டாடி வருகிறோம். இந்த நாளில், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்படும். அந்த நாளில் நமக்காக எல்லையில் பணியாற்றும் வீரர்களை நினைவுகூர்வோம்.

Next Story