இந்தியாவில் முதன்முதலில் தேயிலையை பயிரிட்டவர்


இந்தியாவில் முதன்முதலில் தேயிலையை பயிரிட்டவர்
x
தினத்தந்தி 27 July 2021 12:13 AM GMT (Updated: 27 July 2021 12:13 AM GMT)

மனிதனின் அடிப்படை தேவையான தண்ணீரை அடுத்து சர்வதேச அளவில் அனைவரும் பருகும் பானம் தேநீர்.காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தவில்லை என்றால் அன்றைய நாளில் எதையோ இழந்துவிட்டது போல் தோன்றும் அளவுக்கு நம் வாழ்க்கையோடு ஒன்றாக கலந்துவிட்டது.

கி.மு. 3-ம் நூற்றாண்டில் தென்மேற்கு சீனாவில் ஷாங் பேரரசர்கள் தேநீரை மருந்தாக பயன்படுத்தியதற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன. கி.பி. 800-களில் தேநீர் அருந்தும் பழக்கம் ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானில் இருந்தே ஐரோப்பிய நாடுகளுக்கு தேயிலை பரவியது. 17-ம் நூற்றாண்டில்தான் பிரிட்டனில் தேநீர் மிக பிரபலம் அடைந்தது. இதன் பிறகே இந்தியாவில் தேயிலை உற்பத்தியை ஆங்கிலேயர்கள் தொடங்கினர். முதன் முதலில் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டவர் மணிராம் தேவான் என்பவர் ஆவார். தேயிலையை பற்றி படிக்கக்கூடிய கலைக்கு டேசியோகிராபி என்று பெயர். 
சீனா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் தேநீர் விழா நடத்தப்படுகிறது. 1920-ம் ஆண்டுக்கு பிறகுதான் இந்தியாவில் தேநீர் அருந்துவது மிகவும் பரவலானது.

உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் சீனாவின் பங்கு 36 சதவீதம், இந்தியாவின் பங்கு 22.6 சதவீதம். இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் அசாம். அங்கு 3,04,000 எக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்படுகிறது. அசாம் டீ என்பது உலகளவில் மிகவும் பிரபலம்.

Next Story