சிறப்புக் கட்டுரைகள்

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக் + "||" + Hero Glamor Xtech

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்
இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் புதிதாக கிளாமர் எக்ஸ்டெக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந் நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் மாடலாக கிளாமர் மோட்டார் சைக்கிள் உள்ளது. அதில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய தாக எக்ஸ்டெக் வந்துள்ளது.

இதில் புளூடூத் இணைப்பு வசதி உள்ளது. நேவிகேஷன், யு.எஸ்.பி. சார்ஜர் உள்ளிட்ட வசதிகளோடு, சைடு ஸ்டாண்டு போட்டிருந் தால் வாகனம் இயங்காத நுட்பமும் கொண்டது. இதில் டிரம் பிரேக் மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.78,900. டிஸ்க் பிரேக் மாடல் விலை சுமார் ரூ.83,500.