முக்கியமான உலக விருதுகள்


முக்கியமான உலக விருதுகள்
x
தினத்தந்தி 2 Aug 2021 3:00 PM GMT (Updated: 2 Aug 2021 3:00 PM GMT)

முக்கியமான உலக விருதுகள்.

நோபல் பரிசு : உலகின் மிக உயர்ந்த விருது இது. 1901-ம் ஆண்டு முதல் சமாதானம் உள்ளிட்ட 6 துறைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் டிசம்பர் 10-ம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது.

காந்தி அமைதி பரிசு : காந்திய வழியில் வன்முறை இன்றி போராடி வெற்றிபெறும் சமாதான காவலர் களுக்கு இந்திய அரசு வழங்கும் சர்வதேச அமைதி விருது இது. காந்தியின் 125-வது பிறந்த நாளான 1995ம் ஆண்டு இந்த விருது ஏற்படுத்தப்பட்டது. இதன் பரிசுத்தொகை ரூ.1 கோடி.

இந்திரா காந்தி அமைதி மற்றும் வளர்ச்சி விருது : மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்திய அரசு வழங்கும் சர்வதேச சமாதான விருதுகளுள் இதுவும் ஒன்று.

கலிங்க விருது : விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இவர்களின் தனிப்பட்ட சேவையை பாராட்டி யுனஸ்கோ வழங்கும் விருது இது. இதன் பரிசுத் தொகை ஆயிரம் பவுண்டு.

புக்கர் விருது : இலக்கியத்திற்காக இங்கிலாந்து வழங்கும் பரிசு இது. இந்திய பெண் எழுத்தாளர் அருந்ததிராய் 1997-ம் ஆண்டு இந்த விருதை பெற்றார். 1976 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

Next Story