மண்ணுளி பாம்பு


மண்ணுளி பாம்பு
x
தினத்தந்தி 2 Aug 2021 4:12 PM GMT (Updated: 2 Aug 2021 4:12 PM GMT)

மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் மட்டுமே வாழும் சூழ்நிலை காணப்படுகிறது.

மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் மட்டுமே வாழும் சூழ்நிலை காணப்படுகிறது. மண்ணுளி பாம்பு மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். மண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும் மண்ணுளி பாம்பு ஒரு இயற்கை உர உற்பத்தி தொழிற்சாலை. இது இடும் எச்சம் வீரியமான இயற்கை உரம். ஒரு நிலத்தில் ஒரு மண்ணுளி பாம்பு இருந்தால் அந்த இடத்தை சுற்றிலும் பல ஏக்கர்களுக்கு போதுமான இயற்கை உர சக்தியினை ஒரு மண்ணுளி பாம்பால் உற்பத்தி செய்யலாம். இந்த மண்ணுளி பாம்புகள் மணற்பாங்கான இடங்களையே விரும்பி வாழும். இவை மண்ணில் சுவாசிப்பதன் மூலம் மண்ணின் காற்று உள்புகும் திறனும் அதிகரித்து ஆக்சிஜனும், நைட்ரஜனும் இயற்கையாகவே மண்ணுக்கு ஏற்றப்படுகிறது. நாளடைவில் இயற்கை விவசாயத்தினை அழித்து, செயற்கை உர சந்தையை அதிகப்படுத்த மண்ணுளி பாம்பு வியாபாரம் தோன்றியது. இது தண்டணைக்கு உரிய குற்றமாகும். மண்ணுளி பாம்புகளில் சிவப்பு நிற மண்ணுளி பாம்பு அரிய வகையை சேர்ந்தது. சர்வதேச சந்தைகளில் இதற்கு அதிக மவுசு இருக்கிறது. குறிப்பாக சீனா மற்றும் மலேசியா நாட்டில் இந்தப் பாம்புகளுக்கு கிராக்கி. அந்த நாடுகளில் பிளாக் மேஜிக் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பாம்புகள் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அரியவகை பாம்புகளை வனவிலங்கள் பாதுகாப்புச் சட்ட பிரிவு 4-ன் கீழ் வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இதை கடத்தினால் 7ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு நண்பனாக திகழும் மண்ணுளி புழுக்கள் இன்று பெரும்பாலும் அழிக்கப்பட்டு் வருகின்றன. மண்ணுளி பாம்பு மண்ணுக்கு அளிக்கும் இயற்கை உரம் தடுத்து நிறுத்தப்படுகிறது. எனவே அவற்றை அழியாமல் பாதுகாத்து இயற்கை விவசாயத்தை காப்போம்.

Next Story