சிறப்புக் கட்டுரைகள்

நண்பர்கள் தினம் + "||" + Friends Day

நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினம்
நட்பு என்பது சாதி, மதம், பேதங்களை கடந்து வந்த ஒன்று. இந்த நட்புக்கு ஆண், பெண் தெரியாது. ரத்தத்தையும், பணத்தையும் பார்க்க தெரியாது.
“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை” - திருவள்ளுவர்

நட்பு என்பது சாதி, மதம், பேதங்களை கடந்து வந்த ஒன்று. இந்த நட்புக்கு ஆண், பெண் தெரியாது. ரத்தத்தையும், பணத்தையும் பார்க்க தெரியாது. சொந்தங்களுக்கு கொடுக்கும் மதிப்பை விட நட்புக்கு கொடுக்கும் மதிப்பு தான் மிக அதிகம்.


சர்வதேச நட்பு தினம்

நண்பர்களுடன் இருக்கும் ஒவ்வொரு தினமும் நண்பர்கள் தினம் தான். இருப்பினும் முதன் முதலில் “யுனடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ்” 1935-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமையை தேசிய நட்பு தினமாக அறிவித்தது. அவ்வண்ணமாக ஆகஸ்டு 1-ந் தேதியான நேற்று சர்வதேச நட்பு தினம் கொண்டாடப்பட்டது.

நட்பில் நாம்

நட்பு என்பது அறியாத வயதில் தொடங்கி பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் வெளி உலகம் முதல் தற்போது சமூக வலைதளங்கள் வரை வளர்ந்து வருகிறது.

இதில் பள்ளி மற்றும் கல்லூரி நட்பு அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவம் தான். வெகுநாட்கள் கழித்து நம் நட்பை சந்திக்க போகிறோம் என்றால் அதைவிட மகிழ்ச்சி ஏதுமில்லை. அறியாத வயதில் நண்பர்ளுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகளும், சேட்டைகளும் விலை மதிப்பற்றது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தொழிநுட்பம் வளர்ந்து விட்டதால் இது போன்ற விளையாட்டுகளும், சேட்டைகளும் மறைந்து விட்டன.

நட்பின் சிறப்பு

“ஆபத்தில் உதவுபவனே உற்ற நண்பன்”. அதாவது சமூக வலைதளங்கள் வளர்ந்து விட்ட நிலையில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் மோசமான நிலையிலும், கஷ்டகாலத்திலும் துணை நிற்க உண்மையாக ஒரு நண்பனாவது இருக்க வேண்டும் என்பது தான் இந்த பொன்மொழி.

நட்பின் பெருமையை உணர்ந்த திருவள்ளுவர் அக்காலத்திலேயே திருக்குறளில் நட்புக்கென்ற ஒரு அதிகாரத்தை படைத்துள்ளார் என்பது இந்த நட்பின் சிறப்பாகும்.

நண்பேன்டா

“நண்பேன்டா” இந்த ஒரு வார்த்தையை நம் நண்பர்களிடம் சொல்லிேய பல விஷயங்களை நண்பர்கள் மூலம் நிறைவேற்றிருப்போம். நம் வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் நம்முடைய சில பிரச்சினைகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள தயங்குகிறோம். ஆனால் நம் நண்பர்களிடம் அவற்றை எந்த தயக்கமுமின்றி கூறுகிறோம்.

எத்தகைய சோகமும் நண்பர்களை பார்த்ததும் மறந்து விடுவோம். நாம் நன்றாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவதும் நட்புதான். கஷ்டத்தில் இருக்கும்போது ஓடி வந்து உதவி செய்வதும் நட்புதான். பணம் இல்லாதபோது சோறு வாங்கி தருவதும் நட்புதான். காசு இருக்கும்பொழுது அதை எடுத்துக்கொண்டு போவதும் நட்புதான். நம்மை மோசமாக கிண்டலடிப்பதும் நட்புதான். மற்றவர்கள் முன் நம்மை விட்டு கொடுக்காததும் நட்பு தான்...

தொடர்புடைய செய்திகள்

1. ஜூலை-1 புலவர் குழந்தை பிறந்த தினம்
தமிழறிஞர் புலவர் குழந்தை 1906-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பிறந்தார். திண்ணைப் பள்ளியொன்றில் கல்வி பயின்ற இவர், சிறுவயதிலேயே கவிபாடும் திறனைப் பெற்றார்.
2. தேசிய மருத்துவர் தினம்
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டதுதான், மருத்துவர் தினம். ‘உலக மருத்துவ தினம்’ என்று இருந்தாலும், ‘தேசிய மருத்துவ தினம்’என்ற ஒன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
3. பன்னாட்டு கூட்டுறவு தினம்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோசலிசவாதியான சார்லஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஓவன், டாக்டர் வில்லியம் கிங் ஆகியோரின் சிந்தனையில் உதித்த தத்துவமே, ‘கூட்டுறவு’. இது 1844-ல் ரொக்டேல் நகர தொழிலாளர் களால் செயல்வடிவம் பெற்றது.
4. 7-வது சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு
7-வது சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு.
5. உலகப் பெருங்கடல் தினம்
பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கோள்களில், பூமியில் மட்டுமே பரவியிருக்கும் ஒன்று, கடல்.