போவா 2 ஸ்மார்ட்போன்


போவா 2 ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 11 Aug 2021 2:00 PM GMT (Updated: 11 Aug 2021 2:00 PM GMT)

போவா 2 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.9 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது.

டெக்னோ என்ற நிறுவனம் போவா 2 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.9 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதை மைக்ரோ எஸ்.டி. கார்டு பயன்படுத்துவதன் மூலம் 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம்.

இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 48 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 7 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

கருப்பு, சில்வர், நீலம் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.10,999. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.12,999.

Next Story