32 அங்குல எம்.ஐ. ஸ்மார்ட் டி.வி.


32 அங்குல எம்.ஐ. ஸ்மார்ட் டி.வி.
x
தினத்தந்தி 18 Aug 2021 5:37 PM GMT (Updated: 18 Aug 2021 5:37 PM GMT)

ஜியோமி நிறுவனம் 32 அங்குல எம்.ஐ. ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோமி நிறுவனத்தின் அங்கமான எம்.ஐ. தற்போது 32 அங்குல அளவிலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.15,999. இதன் திரை ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்பிளேயைக் கொண்டது. இதில் 1.5 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் அம்லோஜிக் கோர்டெக்ஸ் ஏ 53 பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவகம் உள்ளது. 10 வாட் திறன் கொண்ட 2 ஸ்பீக்கர்களும் இருக்கிறது. இதில் உள்ளீடாக கூகுள் குரோம்காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் வசதியும் உள்ளது.

Next Story