கூகுள் நெஸ்ட் கண்காணிப்பு கேமராக்கள்


கூகுள் நெஸ்ட் கண்காணிப்பு கேமராக்கள்
x
தினத்தந்தி 19 Aug 2021 9:43 AM GMT (Updated: 19 Aug 2021 9:43 AM GMT)

கூகுள் நிறுவனம் 4 மாடல் புதிய ரக நெஸ்ட் என்ற பெயரிலான கண்காணிப்பு கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது.

தேடுபொறியில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் கூகுள் நிறுவனம் மிகவும் பிரத்யேகமான மின்னணு சாதனங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. தற்போது 4 மாடல் புதிய ரக நெஸ்ட் என்ற பெயரிலான கண்காணிப்பு கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது. பிரத்யேக வடிவமைப்பு மற்றும் தனித்தனி பயன்பாடுகளைக் கொண்டவையாக இவை விளங்குகின்றன. பேட்டரியில் செயல்படக்கூடிய அழைப்பு மணி கொண்டது. இதை விருப்பமான இடத்தில் நிறுவிக் கொள்ள முடியும்.

இந்த கேமராக்கள் அனைத்துமே பதிவாகும் காட்சிகளை தாமாகவே கணித்து தேவையற்றதை நீக்கி விடக்கூடியவை. மேலும் முக்கியமான நிகழ்வுகளை பதிவு செய்து வைத்திருக்கும். நெஸ்ட் கேம் மாடலில் வை-பை இணைப்பு துண்டித்தாலோ அல்லது மின்சாரம் தடைப்பட்டாலோ தானாகவே ஒரு மணி நேரம் வரை காட்சிகளை பதிவு செய்யக்கூடியது. இவற்றின் விலை சுமார் ரூ.13,350.

Next Story