பள்ளிக்கூடம் போகாத மேதை


பள்ளிக்கூடம் போகாத மேதை
x
தினத்தந்தி 6 Sep 2021 8:04 AM GMT (Updated: 6 Sep 2021 8:04 AM GMT)

ரேடியோவுக்கு அடிப்படையான கம்பி இல்லாத் தந்தியை கண்டுபிடித்தவர் மார்கோனி.

ரேடியோவுக்கு அடிப்படையான கம்பி இல்லாத் தந்தியை கண்டுபிடித்தவர் மார்கோனி. இத்தாலி நாட்டை சேர்ந்த இவர் 1874-ம் ஆண்டு பிறந்தார். பள்ளிக்கு சென்று இவர் பாடம் கற்கவில்லை. ஆசிரியர்களே இவர் வீட்டுக்கு வந்து பாடம் கற்பித்தனர். சிறுவனாக இருந்தபோதே வீட்டு மாடியில் பல ஆராய்ச்சிகளை செய்து வந்தார் மார்கோனி.

20-ம் வயதிலேயே மின் அலைகள் மூலமாகச் செய்கைக் குறிகளை (சிக்னல்) அனுப்பிக் காட்டினார். இதுவே, பின்னாளில் கம்பி இல்லா தந்தி ஆயிற்று.

1909-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இவர், 1912-ல் கார் விபத்து ஒன்றில் தனது வலது கண்ணை இழந்தார். எனினும், முதல் உலகப்போரின்போது இத்தாலியின் கம்பியில்லாத் தந்தி படைப் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

மேலும், 1919-ல் பாரிஸ் நகரில் நடைபெற்ற உலக சமாதான மாநாட்டிற்கு, இத்தாலி நாட்டின் பிரதிநிதியாக சென்று உலக ஒற்றுமைக்கு வழிவகுத்தார்.

Next Story