பொலேரோ நியோ என் 10


பொலேரோ நியோ என் 10
x
தினத்தந்தி 16 Sep 2021 11:58 AM GMT (Updated: 16 Sep 2021 11:58 AM GMT)

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் பிரபல மான பொலேரோ மாடலில் கடந்த மாதம் பொலேரோ நியோ அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அதில் மேம்பட்ட சில வசதிகளைக் கொண்ட நியோ என் 10 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் மல்டி டெரைன் தொழில்நுட்பம் (எம்.டி.டி.) புதியதாக இடம் பெற்றுள்ளது. சுழற்சி தேவைப்படும் சக்கரத்துக்கு மட்டும் அதிக விசையை அனுப்பி பிற சக்கர சுழற்சியை நிறுத்தும் தொழில்நுட்பம் தான் எம்.டி.டி. எனப்படும் மல்டி டெரைன் நுட்பமாகும். உள்புறம் 7 அங்குல தொடு திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. புளூடூத் இணைப்பு வசதி 15 அங்குல அலாய் சக்கரம், ஸ்டீயரிங்கிலேயே ஆடியோ கண்ட்ரோல் வசதி, குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டது.

இதில் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் என்ஜின் உள்ளது. இது 100 ஹெச்.பி. திறன் மற்றும் 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை வெளிப்படுத்தும். 5 கியர்களைக் கொண்டது. ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மாருதி விடாரா பிரீஸா உள்ளிட்ட மாடல் கார்களுக்குப் போட்டியாக இது இருக்கும் என்று தெரிகிறது.

Next Story