வாய் சுகாதாரத்தை மேம்படுத்த செய்ய வேண்டியவை


வாய் சுகாதாரத்தை மேம்படுத்த செய்ய வேண்டியவை
x
தினத்தந்தி 18 Sep 2021 3:41 PM GMT (Updated: 18 Sep 2021 3:41 PM GMT)

எந்த வகையான உணவாக இருந்தாலும் அதனை சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளித்து உமிழ வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் பருகி வாய் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சாக்லெட், ஐஸ்கிரீம், பிஸ்கெட், இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது.

சோடா, செயற்கை குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். சூடாக காபி, டீ அருந்துவதோ, சில்லென்று அருந்துவதோ கூடாது. இதனால் நரம்புகள் பாதிப்படைந்து பற்கூச்சம் ஏற்படும்.

பழச்சாறுகளுக்கு பதில் பழங்களை கடித்துமென்று சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய், கேரட் போன்றவற்றை மென்று சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

உணவின் ஜீரணம் வாய் பகுதியிலிருந்தே தொடங்கிவிடுகிறது. அதனால் உணவை நன்குமென்று சுவைத்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

சுண்ணாம்பு சத்துள்ள பால், பாதாம் பருப்பு, எள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காலை எழுந்தவுடனும், இரவு படுக்கைக்கு செல்லும் முன்பும் பல் மற்றும் வாய் பகுதிகளை துலக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

எந்த வகையான உணவாக இருந்தாலும் அதனை சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளித்து உமிழ வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் பருகி வாய் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். நாவறட்சி, தொண்டை வறட்சி ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Next Story