சிறப்புக் கட்டுரைகள்

சிட்ரோயன் காம்பாக்ட் எஸ்.யு.வி. + "||" + Citroen Compact SUV

சிட்ரோயன் காம்பாக்ட் எஸ்.யு.வி.

சிட்ரோயன் காம்பாக்ட் எஸ்.யு.வி.
சிட்ரோயன் நிறுவனம் புதிதாக காம்பாக்ட் எஸ்.யு.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
இது 4 மீட்டர் பிரிவுக்குள்ளான வாகனமாக வந்துள்ளது. இந்திய நகரங்களுக்காக பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்ட மாடலாகும். இது நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகெர், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்.யு.வி 300, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸுகி விடாரா பிரீஸா ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி 3 ஏர் கிராஸ் மாடலைப் போன்றே இதன் முகப்பு தோற்றம் உள்ளது.

அதேபோல முகப்பு விளக்கின் தோற்றமும் விசேஷமாக அமைந்துள்ளது. பின்புற வடிவமைப்பு ஸ்போர்டி தோற்றத்தை அளிக்கிறது. இது தவிர முன்புற பம்பர், ரூப் ரெயில்ஸ், இரு வண்ணம், டயமண்ட் கட் அலாய் சக்கரம் ஆகியன இதன் தோற்றப் பொலிவை மேலும் மெருகேற்றுகிறது. 10 அங்குல தொடுதிரை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே இணைப்பு வசதி, பாதுகாப்பு அம்சங்களுக்கு பன்முக ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பொருட்களை வைப்பதற்கு 315 லிட்டர் இட வசதி போன்றவை உள்ளன. இது 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. 5 மேனுவல் கியர் மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டதாக இது வந்துள்ளது.