சிறப்புக் கட்டுரைகள்

ஹூவெய் ஸ்மார்ட் கடிகாரம் + "||" + Huawei smart watch

ஹூவெய் ஸ்மார்ட் கடிகாரம்

ஹூவெய் ஸ்மார்ட் கடிகாரம்
ஹூவெய் நிறுவனம் ஜி.டி 2 புரோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
எந்த சூழலையும் தாங்கும் வகையில் உறுதியான வடிவமைப்பு கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 100 விதமான உடற் பயிற்சிகளை நீங்கள் மேற்கொண்டாலும் உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவையும், இதய துடிப்பையும் துல்லியமாகக் காட்டும். இதில் உள்ள பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 வாரம் செயல்படக்கூடியது.

இது 1.39 அங்குல வட்ட வடிவிலான திரை, புளூடூத் 5.1 இணைப்பு கொண்டது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களைக் கொண்ட மாடலுடன் இதை இணைத்து செயல் படுத்த முடியும். இதன் விலை சுமார் ரூ.22,990. இதில் கிளாசிக் மாடல் விலை சுமார் ரூ.24,990.