சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..? + "||" + Is there such a 'big' bridge in India?

இந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..?

இந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..?
பாம்பன் மேம்பாலம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். கடலுக்கு மேலாக, 2.2 கி.மீ. தூரம் அமைந்த பாம்பன் ரெயில் பாதையிலும், சாலை மேம்பாலத்திலும் பயணித்திருப்போம்.
இதை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருக்கும் மேம்பாலங்கள் மிகச்சிறியதே. ஆனால் ‘பூபென் ஹசாரிகா’ மேம்பால கதையை கேட்டால், நம்ம ஊர் பாம்பன் மேம்பாலமும் மிகச்சிறியதாகவே தோன்றும். ஆம்..! பூபென் ஹசாரிகா மேம்பாலம், 9.2 கி.மீ. நீளமுடையது.

அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள சாதியா என்ற இடத்திலிருந்து அருணாச்சலப்பிரதேசத்தின் இட்டா நகரிலுள்ள தோலா பகுதி வரை 9.2 கி.மீ. தூரம் நீளக்கூடியது. இவ்விரு பகுதிகளையும் பிரிக்கும் பிரம்மபுத்திரா மற்றும் லோஹித் ஆறுகளுக்கு மேலாக இந்த மேம்பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அசாமின் பிரபல கவிஞரும், முன்னணி பாடகருமான மறைந்த பூபென் ஹசாரிகாவின் நினைவாக இந்தியாவின் மிக நீளமான இந்த பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு
அசாமில் இன்று பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. தலீபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவு: அசாமில் 14 பேர் கைது
தலீபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டதாக அசாமில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. வழி கேட்பது போல் அநாகரீகமாக நடந்து கொண்ட வாலிபர் ; துணிவுடன் எதிர்கொண்ட இளம் பெண்
ஒரு நிமிடம் திகைத்து போன பாவனா சுதாரித்துக்கொண்டு தனது முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த நபரின் ஸ்கூட்டரின் பின் டயரை அப்படியே தூக்கியிருக்கிறார்
4. அசாம் - மிசோரம் எல்லை வன்முறை; அமித்ஷா மீது ராகுல் காந்தி தாக்கு
உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
5. வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- மக்கள் அச்சம்
வடகிழக்கு மாநிலங்களில் சில மணி நேர இடைவெளிக்குள் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களை அச்சம் அடையச்செய்துள்ளது.