சிறப்புக் கட்டுரைகள்

ஐ.பி.எல் ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அணிகள் எவை? + "||" + Which teams will qualify for the IPL plaay-offs?

ஐ.பி.எல் ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அணிகள் எவை?

ஐ.பி.எல்  ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அணிகள் எவை?
சி.எஸ்.கே மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ப்ளேஆப் சுற்றுக்கு செல்வது உறுதியாகி விட்டது மீதமுள்ள அணிகள் எவை என்பது வரவிருக்கும் ஆட்டங்களில் அணிகள் பெறப்பொகும் வெற்றியை பொறுத்து அமையும். 4 அணிகள் ஒரு இடத்திற்காக போட்டியிடுகின்றன.
துபாய்,

2021 ஐ.பி.எல் தொடரில் 39 லீக் போட்டிகள் முடிவடைந்து விட்டன. தற்போதைய நிலையில் சி.எஸ்.கே மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ப்ளேஆப் சுற்றுக்கு செல்வது உறுதியாகி விட்டது மீதமுள்ள அணிகள் எவை என்பது வரவிருக்கும் ஆட்டங்களில் அணிகள் பெறப்பொகும் வெற்றியை பொறுத்து அமையும். 4 அணிகள் ஒரு இடத்திற்காக போட்டியிடுகின்றன.

இன்னும் 17 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் 8 அணிகளுக்குமான ப்ளேஆப் வாய்ப்புகள் குறித்து அறியலாம். 

1) சி.எஸ்.கே - புள்ளிப்பட்டியலில் முதலிடதில் உள்ள சி.எஸ்.கே அணி ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற 96.7% வாய்ப்புள்ளது.

2)டெல்லி கேப்பிட்டல்ஸ் - புள்ளிப்பட்டியலில் சி.எஸ்.கே அணியுடன் சம நிலையில் இருக்கும் டெல்லி அணி, ரன் ரேட் அடிப்படையில் சற்று குறைவாக இருப்பதால் 95% ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.

3) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - தற்போது 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணிக்கு 94.9% ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. 26% முதல் இரண்டு இடங்களுக்குள் வரும் வாய்ப்பும் உள்ளது.

 இந்த 4 அணிகளை தவிர்த்து மற்ற அணிகளுக்கு ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு சிறப்பாக இல்லை.

4) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4-வது இடத்தில் உள்ளது.36% ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.

5)பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் 36% தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.

6)ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6-வது இடத்தில் உள்ளது.மற்ற அணிகளை கட்டிலும் இன்னும் விளையாட  ஒரு போட்டி அதிகமாக உள்ளதால் 55% தகுதி பெறும் வாய்ப்புடன் உள்ளது.

7)மும்பை இந்தியன்ஸ் அணி 36%  தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.

8)கடைசியில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் கணித கணக்குப்படி ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.இன்று நடைபெறும் போட்டியில் தோற்றால் அந்த அணியால் தகுதி பெற முடியாது.

 சி.எஸ்.கே, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் 95% ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் வாய்ப்பு உறுதியாகிவிட்ட நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு தான் போட்டி கடுமையாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஐ.பி.எல். போட்டியில் 4-வது முறையாக கோப்பையை வென்றுள்ள சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
2. வெளியேற்றுதல் சுற்று ஆட்டம்- கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். இல் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 138 ரன்கள் எடுத்துள்ளது.
3. ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்தது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்கு
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றிபெற 130 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.