ஹைசென்ஸ் 55 அங்குல கியூலெட் டி.வி.


ஹைசென்ஸ் 55 அங்குல கியூலெட் டி.வி.
x
தினத்தந்தி 29 Sep 2021 2:27 PM GMT (Updated: 29 Sep 2021 2:27 PM GMT)

ஹைசென்ஸ் நிறுவனம் புதிதாக 55 அங்குலத்தில் கியூலெட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

ஹைசென்ஸ் நிறுவனம் புதிதாக 55 அங்குலத்தில் கியூலெட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதில் குவாண்டம் டாட் என்ற புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இது கோடிக்கணக்கான வண்ண ஷேடுகளை வெளிப் படுத்தும். இதனால் காட்சிகள் மிகவும் துல்லியமாகத் தெரியும். அறையின் வெளிச்சத்துக்கேற்ப டி.வி.யின் ஒளி அளவும் மாறுபடும் தன்மை கொண்டது. 24 வாட் ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ், டால்பி ஆடியோ வசதியும் கொண்டது. டேபிள் மீது வைப்பதற்கு வசதியாக உறுதியான உலோக ஸ்டாண்டுடன் வந்துள்ளது.

இதில் குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ 53 சி.பி.யு. பிராசஸர் உள்ளது. 2 ஜி.பி. ரேம் மற்றும் 16 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஆண்ட்ராய்டு டி.வி. 10 இயங்குதளம் உடையது. உள்ளீடாக குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டென்ட், வை-பை, புளூடூத் 5.0, கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் பிளே மூவிஸ் அண்ட் டி.வி., நெட் பிளிக்ஸ், யூ-டியூப், அமேசான் பிரைம் வீடியோ ஆகியவற்றைக் கொண்டது.

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், யூ-டியூப், நெட்பிளிக்ஸ், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் ஆகியவற்றுக்கு ரிமோட்டில் பிரத்யேக பொத்தான்கள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.59,999.

Next Story