டாடா சபாரி கோல்டு எடிஷன் அறிமுகம்


டாடா சபாரி கோல்டு எடிஷன் அறிமுகம்
x
தினத்தந்தி 29 Sep 2021 3:40 PM GMT (Updated: 29 Sep 2021 3:40 PM GMT)

டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது சபாரி மாடலாகும்.

டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது சபாரி மாடலாகும். இதில் தற்போது கோல்டு எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்த மாடல் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் சில குறிப்பிட்ட இடங்களில் தங்க நிறம் ஜொலிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் விவோ ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் மைதானத்தில் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின் இருக்கை பயணிகளின் வசதிக்காக இதில் வயர்லெஸ் சார்ஜர் உள்ளது. ஏர் பியூரிபயர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தற்போது நடைபெறும் 2-வது சீசன் போட்டி யில் கோல்டு எடிஷன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி.யாக இது உள்ளது. 5 மாதங்களில் 10 ஆயிரம் கார்கள் விற்பனையானதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எஸ்.யு.வி. வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக லேண்ட் ரோவர் தயாரிப்பு வரிசையான டி 8 மேடையில் இது தயாரிக்கப்படுகிறது. சொகுசான பயணத்தை உறுதி செய்யும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது.

Next Story