ஆடி இ-டிரான் பேட்டரி கார்


ஆடி இ-டிரான் பேட்டரி கார்
x
தினத்தந்தி 29 Sep 2021 4:28 PM GMT (Updated: 29 Sep 2021 4:28 PM GMT)

பிரீமியம் சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஆடி நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான பேட்டரி கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

பிரீமியம் சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஆடி நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான பேட்டரி கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இ-டிரான் ஜி.டி. மற்றும் ஆர்.எஸ். இ-டிரான் ஜி.டி. ஆகிய இரண்டு மாடல் கார்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 390 கிலோவாட் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச திறன் 630 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக்கூடியது. இதை ஸ்டார்ட் செய்து 4.1 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும்.

இதில் மற்றொரு மாடலான ஆர்.எஸ். இ-டிரான் ஜி.டி. மாடல் 475 கிலோவாட் திறன் கொண்டது. இது 830 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக்கூடியது. இதை ஸ்டார்ட் செய்து 3.3 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும். இதை சார்ஜ் செய்தால் 481 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். மூன்று மாதங்களில் இந்நிறுவனம் 5 மாடல்களில் பேட்டரி கார்களை அறிமுகம் செய்துள்ளது.

Next Story