மாநில செய்திகள்

"இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது" சசிகலா தீவிர சுற்றுப்பயணத்துக்கு திட்டம்...? + "||" + "Can't be idle looking anymore" Plan for an intense tour of Sasikala ...?

"இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது" சசிகலா தீவிர சுற்றுப்பயணத்துக்கு திட்டம்...?

"இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது" சசிகலா தீவிர சுற்றுப்பயணத்துக்கு திட்டம்...?
அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 16-ந் தேதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். அ.தி.மு.க. பொன்விழாவை அந்த கட்சியினர் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
 
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியில் வந்தார். அப்போது தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்த அவர், பின்னர் பின் வாங்கினார்.

தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அவர் அறிக்கை வெளியிட்டார்.

தேர்தல் முடிவுக்கு பிறகு சசிகலாவிடம் மன மாற்றம் ஏற்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொலைபேசியில் தொடர்ந்து பேசிய சசிகலா விரைவில் உங்களை எல்லாம் சந்திப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 16-ந் தேதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.

மறுநாள் 17-ந் தேதியன்று ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு செல்லவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவிக்கும் சசிகலா அதன் பிறகு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறையில் இருந்து விடுதலையானவுடன் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல சசிகலா திட்டமிட்டார். ஆனால் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் அப்போது அவரால் செல்ல முடியவில்லை.

இந்தநிலையில் சிறையில் இருந்து வந்த பிறகு முதல் முறையாக அவர் ஜெயலலிதா சமாதிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் என்ன நடந்ததோ அதுவே தற்போது மீண்டும் நடந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள சசிகலா, எனவே தான், கட்சிக்கு வந்து எல்லோரையும் நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் சசிகலா கூறியதாக வெளியிடுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

நமது ஒரே நோக்கம், இதய தெய்வம் அம்மா அவர்கள் சொல்லி சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களை பற்றி நாம் கவலை படக் கூடாது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது உண்மையிலேயே பாசம் வைத்திருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள்.

தொண்டர்களின் மனக்குமுறலை பார்த்தேன். இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு இதய தெய்வம் அம்மாவுடன் கூட இருந்து இந்த கட்சியை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தோம். புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு என்ன நடந்ததோ அதுவே மீண்டும் நடந்துள்ளது. எனவே நான் கட்சிக்கு வந்து எல்லோரையும் நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும்.

இதய தெய்வம் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு துளிகூட மாறாமல் நாம் முயற்சி செய்து நல்லபடியாக வெற்றி வாகை கூட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, எண்ணம்.” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
2. முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்காமல் கேரளத்தின் நிர்ப்பந்தம் காரணமாக நீர் இருப்பை தி.மு.க. அரசு குறைத்திருப்பதாக கூறி தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்
விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் என சசிகலா குறிப்பிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
4. அ.தி.மு.க.பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து
இருள் விலகி ஒளி பிறக்கும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பெயரில் சசிகலா மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெர்வித்து உள்ளார்.
5. முல்லை பெரியாறு அணை விவகாரம்: தமிழக-கேரள அரசுகளை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.