வெளிநாடுகளில் வீடு விற்பனையில் பின்பற்றப்படும் சில வினோதங்கள்...


வெளிநாடுகளில் வீடு விற்பனையில் பின்பற்றப்படும் சில வினோதங்கள்...
x
தினத்தந்தி 11 Oct 2021 4:14 PM GMT (Updated: 11 Oct 2021 4:14 PM GMT)

அமெரிக்காவில் வீடு விற்பவர், வாங்குபவர் இருவர் சார்பிலும் ஒரே ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் இருப்பார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் இதற்கு அனுமதி கிடையாது. சுவீடனில் ஒரு வீட்டை ஆன்லைன் மூலம் விற்கிறார்கள் என்றால் குறைந்த பட்சம் 20 புகைப்படங்களையாவது வெளியிடுவார்கள்.

ஸ்காட்லாந்தில் வக்்கீல்களே ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருப்பார்கள். வீடுகள் வாங்குவது, விற்பது தொடர்பாக உலகெங்கும் நிலவும் சில வித்தியாசமான தகவல்கள் வருமாறு:-

அயர்லாந்தில் ரியல் எஸ்டேட் என்பதை ‘ப்ராபர்டி’ என்ற வார்த்தையில்தான் குறிப்பிடுகிறார்கள். ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் என்பவரை 'பேக்டர்' என்று குறிப்பிடுகிறார்கள். ஸ்காட்லாந்தில் தங்கள் வீட்டை அடமானத்திலிருந்து முழுவதுமாக மீட்டெடுத்தால் தங்கள் வீட்டுக் கதவுக்கு சிவப்பு வண்ணம் பூசுகிறார்கள். ஆக சிவப்பு வண்ணக் கதவு வீட்டின் சொந்தக்காரர்கள் தங்களை பெருமையுடன் எண்ணிக் கொள்கிறார்கள். ஒரு சிவப்பு க்ளிப்பைக் கொண்டு ஒருவர் ஒரு வீட்டையே வாங்க முடியுமா?

ஆனால், இது நடந்திருக்கிறது. 2005-ல் ஒருவர் தன்னுடைய இணையப்பக்கத்தில் தன்னிடமிருந்த ஒரு சிவப்பு வண்ண பேப்பர் கிளிப்பின் புகைப்படத்தை வெளியிட்டார்.அதில் “இதை விடப் பெரிதாகவும், சிறப்பாகவும் இருக்கிற ஏதாவது பொருளை எனக்கு அளித்தால் நான் இந்த சிவப்பு பேப்பர் கிளிப்பை அவருக்கு கொடுக்கத் தயார்” என்றார். சில நாட்கள் கழித்து மீன் வடிவில் காணப்பட்ட ஒரு பேனாவை ஒருவர் அளிக்க முன்வர, அவர் அதை ஏற்றுக் கொண்டு அவருக்கு தனது சிவப்பு க்ளிப்பைக் கொடுத்தார்.

மீண்டும் முன்பு போலவே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். வித்தியாசமான ஒரு கதவுக் குமிழுக்காக தன்னிடமிருந்த மீன் வடிவப் பேனாவை பண்டமாற்று செய்து கொண்டார். இப்படியே 14 முறை பண்டமாற்றுகள் செய்து முடிக்க, கடைசியில் அவர் இந்த முறையினால் கனடாவிலுள்ள கிப்ளிங் நகரில் ஒரு வீட்டுக்கே சொந்தக்காரர் ஆகிவிட்டார்.


Next Story