சிறப்புக் கட்டுரைகள்

மஹிந்திரா எக்ஸ்.யு.வி 700 + "||" + Mahindra XUV 700

மஹிந்திரா எக்ஸ்.யு.வி 700

மஹிந்திரா எக்ஸ்.யு.வி 700
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் எக்ஸ்.யு.வி 700 மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் எக்ஸ்.யு.வி 700 மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டதாக வந்துள்ளது. 7 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.


இதில் முப்பரிமாண இசைக்கு சோனி நிறுவனத் தயாரிப்புகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அத்துடன் ஸ்மார்ட் கதவு கைப்பிடி, 360 கோணத்தில் சுழலும் கேமரா, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டிரைவர் முழங்காலைக் காக்கும் ஏர்பேக், காரின் தொடர் ஓட்டத்தை பதிவு செய்யும் வீடியோ ரெக்கார்டிங் வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டது.

வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப மாறுதல்களை மேற் கொள்ளும் வசதியை இணையதளத்தில் இந் நிறுவனம் அளித்துள்ளது. இதன்படி எத்தனை இருக்கை வசதி வேண்டும்? பெட்ரோல் மாடலா அல்லது டீசல் என்ஜினா? என்பதை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். தாங்கள் விரும்பும் விநியோகஸ்தருக்கு அனுப்பும் வசதியையும் வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். பதிவு செய்த பிறகு மாறுதல் மேற் கொண்டால் அது புதிய பதிவாகத்தான் கருதப்படும். அதன்படி வாகனம் சீனியாரிட்டி அடிப்படையில் டெலிவரி செய்யப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.