சிறப்புக் கட்டுரைகள்

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பெண் தனது 6 மகள்களையும் டாக்டர்களாக்கினார்..! + "||" + Six daughters and all of them doctors: A heart-warming story from Kerala's Kozhikode

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பெண் தனது 6 மகள்களையும் டாக்டர்களாக்கினார்..!

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பெண் தனது 6 மகள்களையும் டாக்டர்களாக்கினார்..!
கத்தாரில் பணியாற்றி வந்த அகமது, தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கத்தாரில் வசித்து வந்துள்ளார்.
கோழிக்கோடு

சாய்னாவின் கதை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. பள்ளி படைப்பை இடையில் நிறுத்திய ஒரு பெண்ணின் கதை.. தனது ஆறு மகள்களுக்கு கல்வி அளித்து அவர்களை டாக்டர்களாக்கி உள்ளார்.

ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சாய்னா  தனது உறவினர் டிவிபி அகமது குஞ்சம்மை திருமணம் செய்து கொள்வதற்காக தனது படிப்பை பாதியில் நிறுத்தினார். அப்போது அவருக்கு  வயது 12 .

அகமது குஞ்சம்மை சென்னையில் வியாபாரம் பார்த்து வந்தார்.  திருமணத்திற்கு பிறகு அகமது  கத்தார் சென்று அங்கு வேலைபார்த்தார். அங்கு  மனைவியுடன் குடியேறினார். 

சாய்னாவுக்கு ஆறு மகள்கள் பிறந்தனர். ஆனால் அதற்காக தம்பதியர் கவலைப்படவில்லை. மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக மாற வேண்டும் என்று விரும்பினர். அதற்காக தங்களது மகள்களுக்கு நல்ல கல்வியை அளிக்க அகமது முடிவு செய்தார். 

மூத்தவர் பாத்திமா, ஹாஜிரா, ஆயிஷா, பயிசா, ரஹ்னாஸ் மற்றும் இளையவர் அமீரா.

 ஆறு மகள்களும் நன்கு படித்தனர். அனைவரும் தற்போது டாக்டர்களாக உள்ளனர்.

சாய்னா கூறுகிறார் எனது  பிரசவத்தைப் பற்றி எங்கள் ஊரில் உள்ள பெண்கள் கேள்விப்படும்போதெல்லாம், அவர்கள் கவலைப்படுவார்கள். நான் பெண் குழந்தைகளை  வளர்ப்பதைப் பற்றி கவலைப்பட்டதில்லை
 நான் அவர்களை ஒரு சுமையாக நினைத்ததில்லை. நான் என் குழந்தைகள் என்பதில் உறுதியாக இருந்தேன்.

நன்றாகப் படித்து அவர்களின் வாழ்க்கையில் நல்ல நிலைகளை அடைய வேண்டும். என் கணவர் நிறைய  புத்த்கங்கள் வாங்கினார் அவர்களுக்கு பொது அறிவு இருக்க வேண்டும் என்று விரும்பினார் என கூறினார்.

சாய்னாவின்  முதல் நான்கு மகள்களும் தற்போது டாக்டர்களாக பணியாற்றி வருகிறார்கள். ஐந்தாவது மகள் சென்னையில் எம்பிபிஎஸ் இறுதியாண்டும், கடைசி பெண் மங்களூருவில் எம்பிபிஎஸ் முதலாமாண்டும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்றால், முதல் நான்கு மகள்களின் கணவர்களும் டாக்டர்கள்தான். கத்தாரில் பணியாற்றி வந்த அகமது, தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கத்தாரில் வசித்து வந்துள்ளார்.

தான் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு அது நடக்காமல் போனதால், தனது ஆறு மகள்களையும் டாக்டராக்கிவிட்டார். மகள்களின் திருமணத்தின் போது, இருவரும் ஒரே துறையில் இருந்தால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும், விட்டுக் கொடுத்துப் போவார்கள் என்பதால், டாக்டர் படித்த மணமகன்களை தேர்வு செய்ததாகவும் கூறுகிறார்.

சுமார் 35 ஆண்டுகள் கத்தாரில் பணியாற்றிவிட்டு, தம்பதிகள் தங்களது மகள்களுடன் கேரளம் திரும்பிவிட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகமது மாரடைப்பால் மரணமடைந்தார். அப்போது இரண்டு மகள்களுக்கு மட்டுமே திருமணமாகியிருந்தது. தனது கணவரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் மற்ற 2 மகள்களுக்கும் டாக்டர்களுக்கே மணமுடித்து வைத்ததோடு, கடைசி 2 மகள்களும் டாக்டர் படிக்க ஊக்கத்துணையாக இருந்து வருகிறார் சாய்னா.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளா:பாம்பை ஏவி மனைவி கொலை - கணவருக்கு இரட்டை ஆயுள், ரூ.5 லட்சம் அபராதம்
*கேரளாவில் மனைவியை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது
2. பாம்பை ஏவி மனைவி கொலை : கணவர் சூரஜ் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு
உத்ராவைக் கொல்ல சூரஜ் பாம்புகளுடன் இரண்டு முயற்சிகளுக்கு மேல் செய்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.