மாநில செய்திகள்

சசிகலா விவகாரம்; அ.தி.மு.க தலைவர்களின் மாறுபட்ட கருத்து..! + "||" + Showtime in Tamil Nadu Politics as Sasikala Throws Down the Gauntlet to Palaniswami

சசிகலா விவகாரம்; அ.தி.மு.க தலைவர்களின் மாறுபட்ட கருத்து..!

சசிகலா விவகாரம்; அ.தி.மு.க தலைவர்களின் மாறுபட்ட கருத்து..!
அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என ஓ பன்னீர் செல்வம் பேசியிருப்பது மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது.
சென்னை,

நான்காண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 16-ம் தேதியன்று சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா. தொடர்ந்து, அக்டோபர் 17-ம் தேதி எம்.ஜி.ஆர் வாழ்ந்த சென்னை வீட்டில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, அ.தி.மு.க கொடியையும் ஏற்றினார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது. 

அதில், கொடியேற்றியவர்: திருமதி வி.கே.சசிகலா, கழகப் பொதுச்செயலாளர்' என்று பொறிக்கப்பட்டிருந்தது.  அது, அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

சென்னை ராமாபுர விழாவில் பேசிய சசிகலா, அ.தி.மு.க ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும். நாம் ஒன்றாக இருக்கவேண்டும். அதிமுக வென்றாக வேண்டும். நமக்குத் தேவை ஒற்றுமைதான் நீரடித்து நீர் விலகாது. என்னால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்று தான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன். நெருக்கடிகள் என்னை சூழ்ந்தபோதுகூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்திவிட்டுதான் சென்றேன்” எனக்கூறியிருந்தார். 

கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா?' எனக் கடுமையாக விமர்சித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதைத் தொடர்ந்து  சசிகலா மீது மாம்பலம் காவல் நிலைய ஆணையரிடம் புகார் ஒன்றையும் அவர் அளித்தார். 

சசிகலாவின் பேச்சு குறித்து அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பில்லை எனக்கூறியதோடு மிகக்கடுமையாக சாடியிருந்தார். 

இதனால், சசிகலாவின் சமாதான தூது முயற்சியை அ.தி.மு.க. தலைவர்கள் ஏற்க போவது இல்லை என்று பேசப்பட்டது.  

இந்த நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இன்று அளித்த பேட்டி, அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

அவர் கூறும் போது அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது  குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.  அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஏற்றுக்கொள்வது என்பது மக்களின் விருப்பம். 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே தொண்டர்கள் விருப்பபடி   அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது என கூறினார்.


ஓ.பன்னீர் செல்வம பேட்டி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 

சசிகலா, அவரை சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என ஓ.பன்னீர் செல்வம்  கூறினார். சசிகலா அவரை சார்ந்தவர்களை எதிர்த்து தான்  தர்மயுத்தம் நடத்தினார்.  ஓ.பன்னீர் செல்வம்  பேசியதை முழுமையாக பார்த்துவிட்டு நான் விளக்கம் அளிக்கிறேன். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளோம். அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க கூடாது எனக் கூறியவர்  என கூறினார்.

சசிகலா விவகாரத்தில் அ.தி.மு.க.வின் தலைவர்களின் மாறுபட்ட கருத்து தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எத்தனை சோதனைகள் வந்தாலும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன்
எத்தனை சோதனைகள் வந்தாலும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன் சசிகலா அறிக்கை.
2. சிலரின் தேவைகளுக்காக செயல்படும் அ.தி.மு.க. நிலை மாறும் - சசிகலா
ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் தற்போது அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதன் நிலை மாறும் என சசிகலா கூறி உள்ளார்.
3. டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கும் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்..! - முழு விவரம்
அ.தி.மு.க.வில் டிசம்பர் 13 முதல் 23ஆம் தேதி வரை உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
4. 5-ந் தேதி நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி
5-ந் தேதி நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி.
5. வேதா இல்ல விவகாரம்: மேல் முறையீடு செய்ய அதிமுக முடிவு
வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி அதிமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.