கிரிக்கெட்

களத்தில் என் தீவிரம் குறைந்தால் கிரிக்கெட்டையே விட்டு விடுவேன்- விராட் கோலி + "||" + If I can't keep my Intensity going the same as player,I will not play anymore says Virat Kohli

களத்தில் என் தீவிரம் குறைந்தால் கிரிக்கெட்டையே விட்டு விடுவேன்- விராட் கோலி

களத்தில் என் தீவிரம் குறைந்தால் கிரிக்கெட்டையே விட்டு விடுவேன்- விராட் கோலி
கேப்டனாக இல்லாத போதும் ஆட்டம் எங்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நான் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன்.
துபாய்

20  ஓவர் உலகக்கோப்பை போட்டியில்  கோப்பை  வெல்லும் அணியாக கருதப்பட்ட இந்திய அணி நேற்று நடந்த தனது கடைசி லீக் போட்டியுடன் உலககோப்பை பயணத்தை முடித்து கொண்டது. 

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய  20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தனது  முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இது வரை நடந்த 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணியிடம் தோற்காத இந்திய அணி முதல் முறையாக இந்த ஆண்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது.

அதன் பிறகு நியூசிலாந்து அணியிடமும் தோல்வி அடைந்த காரணத்தால் ஏறக்குறைய இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு அப்போதே தகர்ந்தது. பின்னர் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி  ஆப்கானிஸ்தான் , ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தியது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்திய அணி நமீபியா அணியை எதிர்கொண்டது. செப்டம்பர் மாதமே  20 ஓவர்  உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக கேப்டன் கோலி அறிவித்து இருந்தார். அதே போல் நேற்று இந்திய 20 ஓவர்  அணியின் கேப்டனாக கடைசி போட்டியை கோலி விளையாடினர்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.முதலில் பேட் செய்த நமீபியா அணி 20 ஓவர் முடிவுகளில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து. 133 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது .

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த விராட் கோலி கூறியதாவது,:-

20 ஓவர் கேப்டன்சியிலிருந்து விலகுவது நல்ல முடிவுதான். என்னுடைய  பணிச்சுமையை நிர்வகிக்க இதுதான் சரியான நேரம் என்பதை உணர்கிறேன். கடந்த  6 முதல் 7 ஆண்டுகளாக  பணிச்சுமை கடுமையாக  இருந்தது . 

இந்த உலகக்கோப்பையில் விரும்பத்தக்க முடிவுகள் கிடைக்கவில்லை, ஆனால் நல்ல கிரிக்கெட்டை ஆடினோம். கடைசி 3 ஆட்டங்களில் காட்டிய தீவிரம் ஒவ்வொரு ஆட்டத்துக்கும்  முக்கியமானதாகும்.

20 ஓவர்  கிரிக்கெட் போட்டியை  பொறுத்தவரை ஒவ்வொரு ஓவர்களும் முக்கியமானதாகும்.முதல் 2 போட்டிகளில் தொடக்கத்தில்  2 ஓவர்கள்  அதிரடி கிரிக்கெட்டை  ஆட நாங்கள்  தவறினோம்.

 நான் ஏற்கெனவே கூறியது போல் நாங்கள் தைரியமாக ஆடவில்லை. இந்தப் தொடர் எங்களுக்குக் கடினமாக இருந்தது. டாஸ் வெல்லாத  காரணத்தால்  தோற்றோம் என்று சாக்குப்போக்கு கூறும் அணி நாங்கள் அல்ல.

உதவிப் பயிற்சியாளர்களுக்கு பெரிய நன்றி. அவர்கள் எங்களுக்கு பெரிய உறுதுணையாக இருந்து உள்ளனர்.எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களான அவர்கள் அனைவருக்கும் நன்றி.

கேப்டனாக இல்லாத போதும் ஆட்டம் எங்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நான் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன்.

இந்த உலகக்கோப்பையில் சூரியகுமார் யாதவுக்கு ஆட நேரம் கிடைக்கவில்லை, எனவே நேற்று அவரை 3ம் நிலையில் இறக்கினோம். புதிய வீரர்கள்  உலகக்கோப்பை போட்டியிலிருந்து நல்ல நினைவுகளைக் கொண்டு செல்ல வேண்டும்.அதனால்தான் நான் இறங்காமல் அவரை களம் இறக்கினேன்.

கேப்டனாக இல்லாவிட்டாலும் உங்கள் ஆட்டத்தின்  தீவிரம் அதே நிலையில் இருக்குமா என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கோலி , கேப்டனாக இல்லாவிட்டாலும் என் தீவிரம் குறையாது. அப்படி குறைந்தால் இனி நான் கிரிக்கெட் ஆடவே மாட்டேன்.

இவ்வாறு கோலி பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகல் : விராட் கோலிக்கு நோட்டீஸ் : கங்குலி மறுப்பு..!
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் விராட் கோலி அறிவித்தார்.
2. ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி!
விராட் கோலி, இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைந்துள்ளார்.
3. டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.
4. களத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தான் தெரியும்..! வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது - விராட் கோலி
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் வசப்படுத்தியது
5. நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன்: விராட் கோலி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 11 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது.