குடியேற தயாரான வீடுகள்


குடியேற தயாரான வீடுகள்
x
தினத்தந்தி 16 Nov 2021 3:35 PM GMT (Updated: 16 Nov 2021 3:35 PM GMT)

மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, தேவைப்படும் புதிய வீடுகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 88 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு, குடியேறுவதற்கு தயாரான நிலையில் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடியே 20 லட்சம். மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, தேவைப்படும் புதிய வீடுகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 88 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தேவைக்கும் குறைவாகத்தானே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை இருக்கிறது என்றும் தோன்றக் கூடும். ஆனால், உண்மை நிலை நேர் எதிரானது.

புதிய வீடு தேவைப்படும் ஒரு கோடியே 88 லட்சம் குடும்பங்களில், சுமார் 95 சதவீதம் பேர் குறைந்த வருவாய் அல்லது பொருளாதார நிலையில் பின்தங்கி இருப்பவர்கள். இவர்களுக்குத் தேவையானது பல லட்ச ரூபாய் மதிப்பிலான உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகள் அல்ல. மாறாக, அவர்களின் அத்தியாவசிய தேவைக்கு ஏற்ற அடிப்படை வசதிகளைக்கொண்ட குறைந்த விலை வீடுகள்தான்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டால், 2011-ம் ஆண்டு கணக்கீட்டின்படி, இந்தியாவில் குடும்பங்களின் எண்ணிக்கை 24 கோடியே 70 லட்சமாக இருக்கிறது. கடந்த 2001-ம் ஆண்டில் இது 18 கோடியே 70 லட்சமாக இருந்துள்ளது. அதாவது 2001 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும், புதிதாக 6 கோடி குடும்பங்கள் உருவாகியிருக்கின்றன.

இதே காலகட்டத்தில் இந்தியாவில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 8 கோடியை கடந்துவிட்டது. இருந்தாலும் இன்னும் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு சொந்த வீடு என்பது கனவாகத்தான் இருந்து வருகிறது.


Next Story