மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 3


மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 3
x
தினத்தந்தி 24 Nov 2021 6:16 PM GMT (Updated: 24 Nov 2021 6:16 PM GMT)

மென்பொருட்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்பேஸ் கோ 3 என்ற பெயரிலான டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

மென்பொருட்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்பேஸ் கோ 3 என்ற பெயரிலான டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது 105 அங்குல பிக்ஸெல் சென்ஸ் தொடு திரையைக் கொண்டது. தொடு திரையில் விரல் மூலம் டேப்லெட்டாக பயன்படுத்தலாம். இதன் பின்பகுதியில் உள்ள உறுதியான ஸ்டாண்ட் மூலம் இதை லேப்டாப்பாகவும் பயன்படுத்த முடியும். இதில் 10-வது தலைமுறை இன்டெல்கோர் பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் உள்ளது. எளிதில் பயன்படுத்த வசதியாக சர்பேஸ் பேனா உள்ளது.

இதில் விண்டோஸ் 11 இயங்குதளம் உள்ளது. இது எடை (544 கிராம்) குறைவானது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.42,999. சர்பேஸ் பேனா தேவைப்படும் வாடிக்கையாளர்கள் அதற்கு கூடுதலாக சுமார் ரூ.9,099 செலுத்த வேண்டும்.

Next Story