ஹோண்டா கிராஸியா 125 ரெப்சோல்


ஹோண்டா கிராஸியா 125 ரெப்சோல்
x
தினத்தந்தி 24 Nov 2021 6:18 PM GMT (Updated: 24 Nov 2021 6:18 PM GMT)

இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் புதிதாக ஹோண்டா கிராஸியா 125 ரெப்சோல் மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் புதிதாக ஹோண்டா கிராஸியா 125 ரெப்சோல் மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. நகர்ப்புறங்களில் கியர் இல்லாத ஸ்கூட்டர் வாகன உபயோகம் அதிகரித்து வருகிறது. மோட்டார் சைக்கிளுக்கு இணையான வேகம், சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டிருப்பதால் நடுத்தர வயதுப் பிரிவினரில் பலர் மோட்டார் சைக்கிளிலிருந்து இத்தகைய ஸ்கூட்டர்களுக்கு மாறி வருகின்றனர்.

அதைக் கருத்தில் கொண்டு பலவித தொழில் நுட்பங்களை உள்ளடக்கியதாக 124 சி.சி. திறன் கொண்ட கிராஸியா ஸ்கூட்டரை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக தீர்மானிக்கப் பட்ட பியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில் நுட்பம் (பி.ஜி.எம்.-எப்.ஐ.), வாகனம் சிக்னலில் நிற்கும்போது, எரிபொருள் சிக்கனத்திற்காக வாகன செயல்பாடு நின்றுவிடும். அதேசமயம் ஸ்டார்ட் செய்யும்போது உடனே செயல்படும் வகையிலான இ.எஸ்.பி. நுட்பம் இதில் உள்ளது. எல்.இ.டி. முகப்பு விளக்கு, பன்முக செயல்பாடுகளைக் கொண்ட சுவிட்ச், சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டர், இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, 3 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான பின்புற சஸ்பென்ஷன், முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் வசதி உள்ளது.

இதில் சைடு ஸ்டாண்ட் போட்டிருந்தால் வாகனம் ஸ்டார்ட் ஆகாது என்பது சிறப்பம்சமாகும். மோட்டோ ஜி.பி. வண்ணமாக சிவப்பு, கருப்பு, வெள்ளை நிற ஆரஞ்சு கோடுகள் அதிகம் இடம்பெற்று பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது.

பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப இதன் என்ஜின் வடிவமைப்பு உள்ளது. 8.25 பி.எஸ். திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை 5 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் இது வெளிப்படுத்தும்.

Next Story